Category Archives: Hollywood Cinema news

Breaking Hollywood stories and exclusive interviews

யார் இந்த ஹயாஓ மியாசகி… தொடர்ந்து வரும் ஏ.ஐ கார்ட்டூன்களின் தந்தை..!

இப்போது சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐகளில் நமது புகைப்படங்களை கொடுத்து ஜிப்லி ஸ்டைல் படமாக மாற்றி வருகிறோம். ஆனால் இந்த ஜிப்லி ஸ்டைல் என்பதற்கு பின்னால் ஒரு வரலாறும் கதையும் உள்ளது

வால்ட் டிஸ்னி கார்ட்டூன் என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கிய பிறகு உலகம் முழுக்க அதன் அலை பரவி வந்தது. ஆனால் உலகம் முழுக்க உருவான கார்ட்டூன்களில் வால்ட் டிஸ்னியின் தாக்கமே அதிகமாக இருந்தது.

இந்த நிலையில்தான் ஜப்பானில் ஹயோஓ மியாசகி என்கிற ஓவியர் புது வகையான கார்ட்டூனை உருவாக்கினார். இதுவரை வந்த கார்ட்டூன்களில் இருந்து அவரது கார்ட்டூன் தனித்துவமாக இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஹயோஓ மியாசாகியின் முதல் கார்ட்டூன் படமான Nausicaä of the Valley of the Wind, என்கிற திரைப்படம் வந்தது.

இந்த திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் ஸ்டுடியோ ஜிப்லி. ஸ்டுடியோ ஜிப்லி மியாசகி மற்றும் சிலர் சேர்ந்து உருவாக்கிய நிறுவனமாகும்.

இதனை தொடர்ந்து வித்தியாசமான அனிமே கார்ட்டூன்களை உருவாக்க துவங்கினார் மியாசகி. மியாசாகியை பொறுத்தவரை அவருக்கு தொழில்நுட்பம் மீது அவ்வளவாக ஈர்ப்பு கிடையாது.

1985 ஆம் ஆண்டு கைகளால் ஓவியத்தை வரைந்துதான் கார்ட்டூன் படங்களை இவர் உருவாக்கினார். இப்போது வரை அதையேதான் செய்து கொண்டுள்ளார். எவ்வளவோ அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பிறகும் கூட மியாசாகி கைகளாலேயே தனது கார்ட்டூன்களை வரைகிறார்.

அவருடைய கார்ட்டூன்களுக்கும் கூட தனிப்பட்ட வரவேற்பு இருக்கிறது அவர் இயக்கிய திரைப்படங்களில் ஸ்ப்ரிட்டட் அவே. த பாய் அண்ட் த ஹெரான் மாதிரியான படங்கள் அதிக விருதுகளை வாங்கியுள்ளன. ஆனால் மை நெய்பர் டொடொரோ என்கிற படம்தான் அவர் படத்தில் மிக பிரபலமான திரைப்படமாகும்.

அதனால்தான் அவரது கார்ட்டூன்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

எந்திரன் கதையை காபி அடிச்சி ஹாலிவுட்டில் படம்.. வெளியானது மேகன் 2.0 ட்ரைலர்..!

தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுக்க பிரபலமான திரைப்படம்தான் எந்திரன். இந்த திரைப்படம் வந்தப்போது தமிழ் சினிமாவிற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பமே புதிய விஷயமாக இருந்தது. அதனால் இந்த படம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்து அதன் தொடர்ச்சியாக 2.0 என்கிற திரைப்படமும் வந்தது. இது அனைவருக்குமே தெரியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை அமைப்பில் ஹாலிவுட்டில் உருவான ஒரு திரைப்படம்தான் மேகன்.

எந்திரன் திரைப்படத்தில் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக உருவாக்கப்படும் ரோபோ பிறகு தீய சக்தியாக மாறிவிடும். அதே போல மேகன் திரைப்படத்திலும் ஒரு குழந்தையை பாதுக்காப்பதற்காக ரோபோவை உருவாக்குகின்றனர்.

ஆனால் அந்த ரோபோ குழந்தையை பாதுகாப்பதற்காக சுற்றி இருப்பவர்களை எல்லாம் கொலை செய்ய நினைக்கிறது. தொடர்ந்து கெட்ட வழியில் செல்லும் ரோபோவை இறுதியில் அடக்குகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர் தற்சமயம் வெளியானது. இந்த ட்ரைலரின் படி மேகனின் நினைவுகளை எடுத்து அதை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் ரோபோவுக்குள் செலுத்துகின்றனர்.

இதனால் மேகனால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு நடுவே மேகனை விடவும் அதிக தீய குணங்களை கொண்ட அமேலியா என்கிற இன்னொரு ரோபோட்டை யாரோ தயாரித்து விடுகின்றனர். அது விஞ்ஞானியான கெம்மா ஃபாஸ்டரையும் அவளது மகள் கேடியையும் கொல்ல நினைக்கிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் வில்லியாக இருந்த மேகன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்த குடும்பத்தை காப்பாற்ற களம் இறங்குகிறது.

கிட்டத்தட்ட தமிழில் வந்த 2.0 திரைப்படத்திலும் பக்‌ஷி ராஜனை அழிப்பதற்காக முதல் பாகத்தில் வந்த பேட் சிட்டியை வரவழைப்பார்கள். அதே கதை அம்சத்தை கொண்டுள்ளது மேகன் 2.0 திரைப்படம்.

சைக்கோ கில்லருக்கே பொறி வைக்கும் ஹீரோ.. I Saw the Devil (Tamil Dubbing) பட கதை..!

உலக தரத்திலான திரைப்படங்களை எடுப்பதில் தென் கொரியா எப்போதும் புகழ்ப்பெற்ற நாடாக இருந்து வருகிறது. அவர்களது உருவாக்கத்தில் தமிழ் டப்பிங்கில் வந்த திரைப்படம்தான் ஐ சா த டெவில்.. அதாவது ஒரு சாத்தானை பார்த்தேன் என்பது இதன் அர்த்தமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கிம் ஜி ஊன் இயக்கியுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக லீ புயுங் ஹுன் மற்றும் சொய் மின் சிக் நடித்துள்ளனர்.

படத்தின் கதைப்படி சாங் ஒரு பள்ளி பேருந்து ஓட்டுநராக இருந்து வருகிறார். பகல் நேரங்களில் பள்ளி பேருந்து ஓட்டும் பணியை செய்து வருகிறார். ஆனால் இரவு நேரங்களில் இவர் ஒரு சைக்கோ கொலைக்காரராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் கார் ஒன்று பழுதான காரணத்தால் ஒரு பெண் சாலையில் காரில் அமர்ந்துள்ளார். அவளை கடத்தில் செல்லும் சைக்கோ அவளது ஒவ்வொரு உறுப்பையும் தனி தனியாக வெட்டி பல இடங்களில் போட்டு விடுகிறான்.

ஆனால் அந்த பெண்ணின் காதலனான ஜு யுன் ஒரு காவல் அதிகாரி ஆவான். அவந்தான் கதையின் கதாநாயகன். ஜு யுன் யார் தன்னுடைய காதலியை கொலை செய்தார்கள் என தேட துவங்குகிறான்.

இந்நிலையில் சாங் தான் அந்த கொலைக்காரன் என்பதை ஜு யுன் கண்டறிகிறான். இவனை உடனடியாக கொன்றுவிட கூடாது என முடிவு செய்யும் ஜு யுன் அவனது உடலில் ஜி.பி.எஸ் ட்ராக்கரை வைக்கிறான். இதன் மூலம் எப்போதெல்லாம் சாங் கொலை செய்ய கிளம்புகிறானோ அப்போதெல்லாம் அங்கு சென்று அவனை அடித்து கை கால்களை உடைத்துவிடுகிறான் ஜு யுன்.

அதனை தொடர்ந்து அடுத்து என்னவெல்லாம் நடக்க போகிறது என்பதை வைத்து படத்தின் கதை செல்கிறது. ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் இந்த படம் தமிழில் பார்க்க கிடைக்கிறது.

சாத்தான் குழந்தையை கதாநாயகனாக வைத்த கதை.. உலகையே கலக்கும் Ne zha திரைப்படத்தின் கதை இதுதான்..!

தற்சமயம் அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக Ne Zha 2 திரைப்படம் இருந்து வருகிறது. உலகம் முழுக்கவும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் இது ஒரு சீன திரைப்படமாகும்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் காட்டி வரும் சீனர்கள் தற்சமயம் கேமிங், சினிமா மாதிரியான விஷயங்கள் மீதும் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் Ne Zha திரைப்படத்தை இயக்குனர் Jiaozai என்பவர் இயக்கியுள்ளார். அதன் இரண்டாம் பாகமே இப்போது வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் முதல் பாக கதையை இப்போது பார்க்கலாம். சீனத்தில் உள்ள நாட்டார் தெய்வங்களை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. ஆதியில் ஒரு அரக்கனிடமிருந்து நல்ல சக்தியையும் கெட்ட சக்தியையும் இரண்டாக பிரிக்கின்றனர்.

அதில் நல்ல சக்தியை Ne Zha என்கிற சிறுவன் பிறக்கும்போது அவனுக்கு அளிக்க வேண்டும் என கட்டளை இருக்கிறது. ஆனால் Shen Gongbao என்கிற கடவுளின் சதியால் அந்த பையனுக்கு நல்ல சக்திக்கு பதிலாக சாத்தானின் சக்தி கிடைத்து விடுகிறது. எனவே உலகை அழிக்கும் சக்தியாக மாறுகிறான் Ne Zha

மேலும் இவன் 3 வயதை அடையும்போது அவன் இடி இடித்து இறந்துவிடுவான். ஏனெனில் அவன் சாத்தான் சக்திகளை கொண்டுள்ளான் என சாபமும் இருக்கிறது.

சீனாவை பொறுத்தவரை அதில் யிங் யாங் என்கிற தத்துவம் உண்டு. எந்த கெட்டதுக்குள்ளும் ஒரு நல்லது இருக்கும். அதே போல எந்த நன்மைக்குள்ளும் ஒரு தீமை இருக்கும். அந்த வகையில் Ne Zha தீய சாத்தான் சக்தியை கொண்டிருந்தாலும் அவனுக்குள் இருக்கும் நல்லவனை கொண்டு வருவதற்கான முயற்சியை வைத்து கதை செல்கிறது.

அனிமேஷன் வேலைபாடுகள் எல்லாம் படத்தில் படு பயங்கரமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

OTT Review: மார்வெல் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ட்ரீட்.. வெளியான டேர்டெவில் ட்ரைலர்.!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அதிக வரவேற்பை பெற்ற ஹீரோக்கள் அதிகம் உண்டு. அதில் முக்கியமானவர் டேர்டெவில். டேர் டெவிலை பொறுத்தவரை ஒரு கண் தெரியாத வக்கீலாக அவர் இருப்பார். அவர் கண்களுக்கு எல்லாமே புகையை போலதான் தெரியும்.

ஆனால் அவரது காதுகளுக்கு அபரிவிதமான சக்தி இருக்கும். மனிதர்களுக்கு துடிக்கும் இதயத்தின் துடிப்பு வரை அவருக்கு கேட்கும். இந்த நிலையில் தவறு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு டேர்டெவில் என்கிற சூப்பர் ஹீரோவாக சென்று தண்டனை வழங்குபவராக கதாநாயகன் இருப்பார்.

இந்த நிலையில் இதே கதையம்சத்தை கொண்டு ஏற்கனவே டேர்டெவில் என்கிற திரைப்படம் 2003 இல் வந்தது. அதில் பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேனில் பேட்மேனாக நடித்த பென் அஃப்ளிக்தான் நடித்திருந்தார்.

மார்க் ஸ்டீவன் ஜான்சன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அந்த படக்கதையை இப்போது சீரிஸாக்கி உள்ளனர்.

பேட்மேன் போலவே ஊரே குற்ற செயல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும்போது அதை எதிர்த்து களம் இறங்குகிறார் டேர்டெவில். இன்னமும் ஹைலைட்டாக ஊர் மேயரே தவறு செய்பவராக இருக்கிறார். வேண்டும் என்றே தனது ஊரை அதிக குற்றம் நடக்கும் நகரமாக வைத்துள்ளார் மேயர்.

இந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக டேர்டெவில் என்ன செய்யப்போகிறார் என்பதே சீரிஸின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிராசிக் பார்க் திரைப்படத்தின் அடுத்த பாகம்.. JURASSIC WORLD: REBIRTH கதை சொல்லும் படத்தின் ட்ரைலர்

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஜுராசிக் பார்க். டைனோசர்களை காட்சிக்காக வைத்திருக்கும் ஒரு தீவுக்கு சென்று அங்கு கதையின் கதாபாத்திரங்கள் டைனோசர்களிடம் இருந்து தப்பிப்பதாக இதன் கதைக்களம் இருக்கும். பெரும்பாலும் ஜுராசிக் பார்க் திரைப்படங்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு தீவில் டைனோசர்கள் வாழ்வதாகவும் அங்கு மக்கள் சென்று மாட்டிக் கொள்வதாகவும் தான் கதை இருக்கும்.

அவர்கள் செல்வதற்கான காரணங்கள் ஒவ்வொரு பாகத்திலும் மாறினாலும் கூட டைனோசர்களிடமிருந்து உயிர் பிழைப்பது தான் அனைத்து படங்களிலும் கதை கருவாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து வந்த ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தில் முற்றிலுமாக கதைக்களம் மாறி அமைந்தது.  மனிதர்களும் டைனோசர்களும் சேர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களால் டைனோசர்கள் நிலை என்னவாகும் என விளக்குவதாக இந்த படம் இருந்தது.

இந்த நிலையில் JURASSIC WORLD: REBIRTH என்கிற அடுத்த பாகம் வருகிற ஜூலை 2 வெளியாக இருக்கிறது இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தை கேரட் எட்வர்ட் என்பவர் இயக்கி இருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்த நடிகை ஸ்கேர்லட் ஜான்சன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் டைனோசர்களின் டிஎன்ஏவை எடுப்பதற்காக டைனோசர்கள் வாழும் ஒரு தீவுக்கு இவர்களெல்லாம் சேர்ந்து செல்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு நடக்கும் விபரீதங்களே கதை கருவாக இருக்கிறது பெரும்பாலும் இந்த மாதிரியாக வெளியாகும் திரைப்படங்களில் முகம் சுளிக்கும் வகையிலான காட்சிகள் இருக்கும்.

ஆனால் ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் அந்த மாதிரியான காட்சிகள் இருந்தது கிடையாது. எனவே பல காலங்களாக இந்த ஜுராசிக் பார்க் வகை திரைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு நல்ல ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயினுக்காகவே பார்க்கலாம் போல.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.. பெண்டாஸ்டின் ஃபோர் புது பட ட்ரைலர்.!

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஹாலிவுட் திரைப்படங்களில் பெண்டாஸ்டிக் போர் மிக முக்கியமான திரைப்படமாகும். ஐந்து விஞ்ஞானிகள் விண்வெளிக்கு செல்லும்போது ஒரு எரிக்கல்லின் கதிரியக்கத்தால் அவர்களுக்கு கிடைக்கும் சக்தியை மையமாக கொண்டு இதன் கதை செல்லும்.

ஒரு நபர் பாறையாக மாறிவிடுவார். மற்றொருவர் நெருப்பாக மாறும் சக்தி கொண்டிருப்பார், தலைமையாக இருப்பவன் எலாஸ்டிக் மாதிரி வளையும் தன்மையை பெற்றிருப்பான். குழுவில் இருக்கும் பெண் மறையும் திறன் பெற்றிருப்பாள்.

இது இல்லாமல் இவர்களுடன் வரும் வில்லனும் தனிப்பட்ட சக்தியை பெற்றிருப்பான். எந்த ஒரு பவரையும் உறிஞ்சிக்கொள்ளும் சக்தி அவனுக்கு இருக்கும். இப்படியாக வெளிவந்த ஃபெண்டாஸ்டிக் போர் திரைப்படம் இரண்டு பாகங்கள் வரை வந்து பிறகு நின்றுவிட்டது.

இந்த நிலையில் இப்போது மீண்டும் ஃபெண்டாஸ்டிக் போர் கதையை படமாக்கியுள்ளனர். இதற்கு The Fantastic Four: First Steps என பெயரிடப்பட்டுள்ளது.  இது 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஹாலிவுட்டில் பிரபல கதாநாயகியான வெனிசா கிர்பி நடித்துள்ளார். ஏற்கனவே மிஷின் இம்பாசிபள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே இவருக்காகவே படத்தை பார்க்க ஒரு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஃபெண்டாஸ்டிக் போர் கூட்டணி அடுத்து மார்வெல்லில் வெளியாகும் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார் மற்றும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே ஆகிய படங்களிலும் வர இருக்கின்றனர்.

இந்த திரைப்படங்களில் வில்லன் டூம்ஸ் டே கதாபாத்திரத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டோனி ஜே.ஆர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் The Fantastic Four: First Steps திரைப்படம் ஜுலை 25 திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட்லைன்… புதுப்படம் ட்ரைலர் ரிலீஸ்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் மீது அதிகமான ஈடுபாடு உண்டு. இணைய வசதி எல்லாம் வருவதற்கு முன்பே டிவிடிகளில் தமிழ் டப்பிங் படங்களை போட்டு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

அப்போதைய காலக்கட்டம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் திரைப்படம்தான் ஃபைனல் டிஸ்டினேஷன். தமிழில் விதியின் விளையாட்டு என்கிற பெயரில் இந்த படத்தின் டிவிடிகள் விற்பனையாகி வந்தது.

பல பாகங்களாக வந்திருந்தாலும் ஃபைனல் டிஸ்டினேஷன் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரிதான் இருக்கும். அதாவது ஒரு மாபெரும் விபத்தில் பல உயிர்கள் சாக வேண்டி இருக்கும். அந்த விபத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தெரிந்து அவர்கள் அந்த விபத்தில் இருந்து ஒரு சிலரை மட்டும் காப்பாற்றி விடுவார்கள்.

அந்த தப்பித்த ஒரு சிலர் விதியின்படி செத்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் சாகாமல் உயிர் பிழைத்து இருப்பதால் விதியே அவர்களது கதையை முடிக்கும். இந்த நிலையில் அவர்களின் மரணம் கொடூரமாக அமைவதை காட்சிப்படுத்தும் வகையில் படத்தின் கதை இருக்கும்.

இந்த நிலையில் அந்த படத்தின் அடுத்த பாகமாக ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட் லைன் என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு நபரின் வாரிசுகளுக்கு மட்டும் விதி ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாக இதன் கதை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன் ட்ரைலர் தற்சமயம் தமிழில் வெளியாகி உள்ளது. அதில் டாட்டூ போடும் பையன் ஒருவனை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறது விதி. இந்த படம் வருகிற மே 16 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

 

 

ஆபிரகாம் லிங்கனும் ரத்த காட்டேரிகளும்.. இந்த ஹாலிவுட் படத்தை பார்த்து இருக்கீங்களா?

2012 ஆம் ஆண்டு வெளியான “Abraham Lincoln: Vampire Hunter” எனும் ஹாலிவுட் திரைப்படம், வரலாறு மற்றும் கற்பனையை ஒன்றிணைத்து ஒரு தனித்துவமான கதையை முன்வைக்கிறது.

இந்த திரைப்படம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஒரு இரத்த காட்டேறியை (வாம்பயர்) வேட்டையாடுபவராக மாறும் கற்பனைக் கதையைச் சொல்கிறது. இயக்குநர் திமூர் பெக்மாம்பெடோவின் திரைக்கதை, பாரம்பரிய வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனை உறுப்புகளை கலந்து, பார்வையாளர்களை ஒரு புதிய அனுபவத்தில் ஈர்க்கிறது.

நடிப்பு:

பெஞ்சமின் வாக்கர், ஆபிரகாம் லிங்கனாக நடித்துள்ளார். அவரது நடிப்பு, லிங்கனின் உண்மையான வரலாற்று தன்மையை பிரதிபலிக்கும் விதமாகவும், அதே நேரத்தில் கற்பனை உலகின் அதிரடி நிகழ்வுகளுக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. மேரி எலிசபெத் வின்ஸ்டெட், டொமினிக் கூப்பர் மற்றும் அந்தோணி மாக்கி போன்ற நடிகர்களும் தங்கள் பாத்திரங்களில் நன்றாக விளங்குகிறார்கள்.

காட்சிகள் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ்:

இந்த திரைப்படத்தின் காட்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளன. வாம்பயர்களுடன் நடக்கும் போராட்டக் காட்சிகள், அதிரடி நிறைந்தவையாகவும், கண்ணைக் கவரும் விசுவல் எஃபெக்ட்ஸுடனும் உள்ளன. குறிப்பாக, இரவு நேர காட்சிகள் மற்றும் வாம்பயர்களின் வடிவமைப்பு பாராட்டத்தக்கது.

இசை:

இசையமைப்பாளர் ஹென்றி ஜாக்மன், திரைப்படத்திற்கு உணர்ச்சிமிக்க பின்னணி இசையை வழங்கியுள்ளார். இசை, கதையின் முக்கியமான தருணங்களை மேலும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது.

விமர்சனம்:

“Abraham Lincoln: Vampire Hunter” என்பது வரலாற்று உண்மைகளையும் கற்பனையையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது பாரம்பரிய வரலாற்று திரைப்படங்களை எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கற்பனை மற்றும் அதிரடி கதைகளை விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஒரு வேடிக்கையான அனுபவத்தை வழங்கும். கதை மற்றும் காட்சிகளில் சில இடங்களில் மந்தமான தருணங்கள் இருப்பினும், ஒட்டுமொத்தமாக இது ஒரு மனரம்மியமான திரைப்படமாக உள்ளது.

 

எட்வர்டும் பத்து கத்தரிக்கோல் விரல்களும்… கேப்டன் ஜாக் ஸ்பேரோ நடிச்ச இந்த படத்தை பார்த்து இருக்கீங்களா?

இயக்குனர் டிம் பர்டன் ஹாலிவுட்டில் மாயாஜாலம் மற்றும் திகில் படங்கள் இயக்குவதில் மிக பிரபலமானவர். அவரது இயக்கத்தில் பைரேட் ஆஃப் தி கரேபியன் படத்தின் நாயகனான ஜானி டப் நடித்த படங்கள் நிறைய உண்டு.

பொதுவாகவே ஜானி டெப்பிற்கு வித்தியாசமான கதை அமைப்புகள் மீது அதிக ஈடுபாடு உண்டு. அப்படியாக அவர் நடித்த எட்வர்ட் சிசெர்ஹேண்ட் Edward Scissorhands என்கிற திரைப்படத்தின் கதையைதான் இப்போது பார்க்க போகிறோம்.

ஒரு சிறு கிராமத்தில் பாலடைந்த பங்களா ஒன்று இருக்கிறது. அங்கு நடந்த விஷயமாக எட்வர்ட்டின் கதை அமைகிறது. அங்கு இருந்த விஞ்ஞானி ஒருவர் மனிதன் போலவே இருக்கும் ரோபோட்டை உருவாக்குகிறார். அதற்கு எட்வர்ட் என்று பெயரிடுகிறார். அதை கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் போலவே மாற்றி வருகிறார்.

அனைத்து பாகங்களும் மனிதனாக மாற்றப்பட்ட பின்னர் இரண்டு கைகளை மட்டும் எந்திர கைகளில் இருந்து மனித கைகளாக மாற்ற வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழக்கிறார் விஞ்ஞானி.

இந்த நிலையில் எட்வர்ட்டுக்கு 10 விரல்களுக்கு பதிலாக கையில் 10 கத்தரிக்கோல்கள்தான் இருக்கின்றன. இதனால் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பழைய பங்களாவிலேயே இருந்து வருகிறார் எட்வர்ட். இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைக்கிறது.

அது எட்வர்டுக்கு சாதகமா அமையுமா அல்லது பாதகமா அமையுமா? என்பதை விளக்கும் வகையில் கதை அமைந்துள்ளது.

கல்லறையில் புதைச்சா உயிர் வந்திடும்.. உயிரை உறையவைக்கும் பேய் படம்..! பெட் செமட்டரி  படம் தெரியுமா?

தமிழ்நாட்டில் க்ரைம் த்ரில்லர் கதைகளை எழுதுவதற்கு ராஜேஷ் குமார் மாதிரியான எழுத்தாளர்கள் இருப்பது போல ஹாலிவுட்டில் பேய் கதைகள் எழுதுவதில் பிரபலமானவர் எழுத்தாளர் ஸ்டீபன் கிங். அவரது பல கதைகளை ஹாலிவுட்டில் படமாக்கி உள்ளனர். அப்படியாக எடுக்கப்பட்டு இரண்டு முறை ஹிட் கொடுத்த திரைப்படம்தான் பெட் செமண்ட்ரி.

இந்த கதையை ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு படமாக்கினார். இந்த படத்தை மேரி லாம்பர்ட் என்பவர் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு மீண்டும் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கெவின் கோயிஸ் மற்றும் டெனிஸ் விட்மெயிர் இயக்கத்தில் இந்த கதை படமாக்கப்பட்டது. இரண்டு முறையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த படத்தின் கதையை இப்போது பார்க்கலாம்.

லூயிஸ் க்ரீட் என்னும் மருத்துவர் அவரது மனைவி ரேச்சல் மகள் எல்லி, மகன் கேஜ் உடன் லட்லோ என்கிற ஒரு சிறு கிராமத்திற்கு குடி வருகின்றனர்.இந்த கிராமத்தில் அனைவருடனும் சகஜமாக பழகினாலும் கூட வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு முதியவர் மட்டும் கொஞ்சம் மர்மமான ஆசாமியாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் எல்லி ஆசையாக வளர்த்து வரும் பூனை ஒன்று விபத்துக்கு உள்ளாகி இறக்கிறது. இதனால் எல்லி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இந்த சமயத்தில் விஷயத்தை அறிந்த முதியவர் ஒரு ரகசியத்தை லூயிஸிடம் கூறுகிரார்.

அதாவது பழங்குடி மக்கள் பயன்படுத்தும் கல்லறை ஒன்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ளது. அது செல்லப்பிராணிகளை புதைப்பதற்கான கல்லறை. ஆனால் அது கொஞ்சம் மர்மமானது என கூறுகிறார்.

அதனை தொடர்ந்து லூயிஸ் தனது பூனையை அங்கு புதைக்கிறார். மறுநாள் அந்த பூனை உயிரோடு வருகிறது. இது லூயிசுக்கு அதிசயமாகவு அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆனால் அந்த பூனையிடம் அதற்கு பிறகு அமானுஷ்ய மாற்றங்களை பார்க்க முடிகிறது.

எப்போதுமே அழுக்காக இருக்கும் அந்த பூனை அனைவரிடமும் ஆக்ரோஷமாக நடந்துக்கொள்கிறது. இதனை தொடர்ந்து அந்த பூனையை தனது மகளே வெறுக்கிறாள் என்பதை அறிந்த லூயிஸ் அதை ஊருக்கு ஒதுக்குப்புறமாக விட்டு விடுகிறார்.

இதற்கு பிறகு ஒரு பிறந்த நாள் விழாவில் விபத்துக்குள்ளாகி எல்லி இறக்கிறாள். தனது மகளின் இறப்பை தாங்கி கொள்ள முடியாத லூயிஸ் அவளையும் அந்த செல்ல பிராணி கல்லறையில் புதைக்கிறார். மறுநாளே எல்லி உயிரோடு வருகிறாள்.

ஆனால் அவள் பார்ப்பதற்கு பேய் போல இருக்கிறாள். மேலும் மிக மோசமனவாளக அந்த சிறுமி இருக்கிறாள். திடீரென அவள் அனைவரையும் கொலை செய்ய துவங்குகிறாள். இந்த நிலையில் அவளிடம் இருந்து இந்த குடும்பம் தப்பித்ததா? இல்லையா? என்பது படத்தின் கதையாக இருக்கிறது.

பேய் பட விரும்பிகள் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாக இது இருக்கும்.

Hollywood: அந்த ஹோட்டலுக்கு போனால் பித்து பிடிச்சிடும்.. பாக்கியராஜே புகழ்ந்த பேய் படம்.. ஸைனிங் படக்கதை..

தமிழ் சினிமா மக்களுக்கு எப்போதுமே ஹாரர் திரைப்படங்கள் மீது அலாதியான பிரியமுண்டு. அப்படியாக 1980 லேயே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம்தான் ஷைனிங்.

ஆங்கிலத்தில் பேய் கதைகள் எழுதுவதில் புகழ்ப்பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்ட கதையாகும். அதே போல ஹாலிவுட்டில் புகழ் வாய்ந்த இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அதனாலேயே இந்த திரைப்படம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது.

படத்தின் கதை:

ஜாக் டோரன்ஸ் என்கிற எழுத்தாளர்தான் கதை நாயகனாக இருக்கிறார்.ஓவர் லுக் ஹோட்டல் என்கிற ஹோட்டல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இருக்கிறது. இன்னும் திறக்கப்படாத அந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஜாக்கிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அந்த ஹோட்டல் ஒரு அமானுஷியம் நிறைந்த ஹோட்டலாக இருக்கிறது. தொடர்ந்து அங்கு நிறைய அமானுஷியங்களை பார்த்துக்கொண்டே இருக்கும் கதாநாயகனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பித்து பிடித்தது போல ஆகிவிடுகிறது.

அதனை தொடர்ந்து அவனே தனது குடும்பத்தை கொலை செய்ய நினைக்கிறான். இதற்கு நடுவே அவனது மகன் டானி என ஒருவன் இருக்கிறான். அந்த சிறுவனின் உடலில் இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறது. அது நடக்க போகும் ஆபத்துகளில் இருந்து டேனியை காப்பாற்றுவதற்காக அடிக்கடி டானியை எச்சரிக்கிறது.

டானியின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டாக்டர் ஸ்லீப் என்கிற இன்னொரு திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் டானியும் அவனது தாயாரும் ஜாக் டோரன்ஸிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தின் கதையில் அந்த ஹோட்டலில் இந்த குடும்பத்தை தவிர யாருமே தங்கவில்லை. அதே போல அருகாமையிலும் வேறு கட்டிடங்கள் இருக்கவில்லை. இப்படியான சூழலில் அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் படத்தின் கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்.