சாத்தான் குழந்தையை கதாநாயகனாக வைத்த கதை.. உலகையே கலக்கும் Ne zha திரைப்படத்தின் கதை இதுதான்..!

தற்சமயம் அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக Ne Zha 2 திரைப்படம் இருந்து வருகிறது. உலகம் முழுக்கவும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் இது ஒரு சீன திரைப்படமாகும்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் காட்டி வரும் சீனர்கள் தற்சமயம் கேமிங், சினிமா மாதிரியான விஷயங்கள் மீதும் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் Ne Zha திரைப்படத்தை இயக்குனர் Jiaozai என்பவர் இயக்கியுள்ளார். அதன் இரண்டாம் பாகமே இப்போது வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் முதல் பாக கதையை இப்போது பார்க்கலாம். சீனத்தில் உள்ள நாட்டார் தெய்வங்களை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. ஆதியில் ஒரு அரக்கனிடமிருந்து நல்ல சக்தியையும் கெட்ட சக்தியையும் இரண்டாக பிரிக்கின்றனர்.

அதில் நல்ல சக்தியை Ne Zha என்கிற சிறுவன் பிறக்கும்போது அவனுக்கு அளிக்க வேண்டும் என கட்டளை இருக்கிறது. ஆனால் Shen Gongbao என்கிற கடவுளின் சதியால் அந்த பையனுக்கு நல்ல சக்திக்கு பதிலாக சாத்தானின் சக்தி கிடைத்து விடுகிறது. எனவே உலகை அழிக்கும் சக்தியாக மாறுகிறான் Ne Zha

மேலும் இவன் 3 வயதை அடையும்போது அவன் இடி இடித்து இறந்துவிடுவான். ஏனெனில் அவன் சாத்தான் சக்திகளை கொண்டுள்ளான் என சாபமும் இருக்கிறது.

சீனாவை பொறுத்தவரை அதில் யிங் யாங் என்கிற தத்துவம் உண்டு. எந்த கெட்டதுக்குள்ளும் ஒரு நல்லது இருக்கும். அதே போல எந்த நன்மைக்குள்ளும் ஒரு தீமை இருக்கும். அந்த வகையில் Ne Zha தீய சாத்தான் சக்தியை கொண்டிருந்தாலும் அவனுக்குள் இருக்கும் நல்லவனை கொண்டு வருவதற்கான முயற்சியை வைத்து கதை செல்கிறது.

அனிமேஷன் வேலைபாடுகள் எல்லாம் படத்தில் படு பயங்கரமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version