Category Archives: News

Latest Tamil movie news, trailers, and reviews

வீடியோ கால் பேசும் காதலர்களை குலைநடுங்க வைத்த சம்பவம் – தெரியாம கூட இத செஞ்சிடாதீங்க

இணையதளம் என்பது வர வர பலருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சின்ன பிள்ளைகளில் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மோசடிகள் மூலமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏதாவது ஒரு மோசடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இப்பொழுது அவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதை சரி செய்வதற்கு மக்கள் விழிப்புணர்வாக இருப்பது மட்டுமே ஒரே வழி என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று படித்து வந்த ஒரு பெண்ணுக்கு நடந்த நிகழ்வு சமீபத்தில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கத்தில் இருந்திருக்கிறார்.

பெண்ணுக்கு நடந்த சோகம்:

இந்த இளைஞர் தொடர்ந்து சாட் மூலமாக பேசி வந்தவர் பிறகு கால் செய்து பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் வீடியோ காலில் வருமாறு அழைத்திருக்கிறார் வீடியோ காலில் நிர்வாண வீடியோ கால் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார்.

அந்த பெண் அதற்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் கத்தியை எடுத்து கையை அறுத்துக் கொள்வேன் என்று கூறி மிரட்டி இருக்கிறார் இதனால் பயந்து போன அந்த பெண் இரண்டு முறை அவருக்கு நிர்வாண வீடியோ கால் செய்திருக்கிறது.

இந்த நிலையில் அந்த வீடியோ காலை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்ட அந்த இளைஞர் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பணம் பறிக்க துவங்கியிருக்கிறார். இப்படி மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை இவர் வாங்கி இருக்கிறார். பிறகு அதுவும் பத்தவில்லை என்று மீண்டும் ஒரு 50 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இந்த தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் காவல்துறையிடம் சென்று புகார் அளித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தற்சமயம் போலீசார் இது குறித்த விசாரணையை துவங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான ஆன்லைன் விஷயங்களை பொறுத்தவரை பெண்கள் இன்னமும் உஷாராக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

 

வெளியானது கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் டீசர்.. இதுதான் படத்தின் கதையாம்.. எம்.ஜி.ஆருடன் தொடர்புடைய கதை!..

தொடர்ந்து தமிழில் மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் இயக்கிய சூது கவ்வும் திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட் திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு அமைந்தது.

அதற்கு பிறகு அதேபோல நிறைய திரைப்படங்கள் தமிழில் வர தொடங்கியது. அதற்கு சூதுக்கவ்வும் திரைப்படம் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது. தொடர்ந்து அதிக இடைவேளை விட்டு படங்கள் எடுத்தாலும் கூட நலன்குமாரசாமி எடுக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது குறைவது இல்லை.

அந்த வகையில் அடுத்து நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார் பெரும்பாலும் கார்த்தி தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் இப்பொழுது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதாக இருக்கிறது.

vaa vaathiyar

சமீபத்தில் அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் மெய்யழகன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பு தான் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

வா வாத்தியார் கதை:

சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் டீசர் என்று வெளியானது வெளியான உடனே இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த படத்தின் கதை குறித்து ஏற்கனவே சில விஷயங்கள் வெளியாகியிருந்தது.

அதன்படி சிறுவயதில் இருந்தே கார்த்தியின் தந்தைக்கு எம்.ஜி.ஆரை மிகவும் பிடிக்கும். எனவே எம்ஜிஆர் படங்களாக போட்டு கார்த்தியை எம்ஜிஆர் மாதிரி வளர்க்க நினைக்கிறார் அவரது தந்தை. ஆனால் அதில் வரும் நம்பியார் கதாபாத்திரத்தை பார்த்து முழுக்க முழுக்க ஒரு கெட்டவனாக வளர்கிறார் கார்த்திக்

ஆனால் அவருக்கு உள்ளாகவே எம்ஜிஆரின் கதாபாத்திரமும் இருக்கிறது அவ்வப்போது அந்த கதாபாத்திரம் வெளிவரும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் வெளிவரும்பொழுது கார்த்திக் நல்லவராகவும் நம்பியாரின் கதாபாத்திரம் வரும்பொழுது கெட்டவராகவும் மாறுவது போன்ற கதை அமைப்புதான் வா வாத்தியாரின் கதை அமைப்பு என்று பேச்சுக்கள் இருந்தன அப்படியான கதை அமைப்பில் இந்த படம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகுந்த் சார் போன்ல சொன்ன அந்த விஷயம்.. அதைதான் அமரன் படத்தில் காட்சியா வச்சேன்.. சீக்ரெட்டை கூறிய இயக்குனர்.!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு வருவதற்கு முக்கிய காரணமே நிஜமான ராணுவ வீரர் ஒருவரின் கதையை படமாக்கி இருக்கிறார்கள் என்பது தான்.

முகுந்த் வரதராஜன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் கதையை தான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படமாக்கி இருக்கிறார். முக்கியமாக சிவகார்த்திகேயனுக்கும் இது ஒரு வகையில் முக்கியமான படமாகும்.

ஏனெனில் இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சீரியசான கதாபாத்திரத்தை கொடுத்து விஜய் அஜித் மாதிரியான கமர்சியல் நடிகர்கள் லிஸ்டில் கொண்டு வந்து சேர்த்து இருப்பது அமரன் திரைப்படம்தான்.

amaran

அமரன் படத்தில் வந்த காட்சி:

இந்த நிலையில் அமரன் படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து அதிக பேச்சுக்கள் இருந்து வந்தன. அமரன் திரைப்படத்தில் முகுந்த் இறந்துவிட்ட செய்தி வருவதற்கு முன்பு சாய்பல்லவி கதாபாத்திரம் போய் படுத்து உறங்குவதாக ஒரு காட்சி இருக்கும்.

ஏன் அந்த காட்சி வைக்கப்பட்டது என்று இயக்குனரிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த இயக்குனர் முகுந்த் வரதராஜன் இறப்பதற்கு முதல் நாள் அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்பொழுது எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதைப் பற்றி குழப்பிக் கொள்ளாதே? நிம்மதியாக தூங்குவதற்கு கற்றுக் கொள் என்று கூறி இருப்பார்.

அதைதான் முகுந்த் வரதராஜனின் மனைவி செய்வதாக நான் காட்சியில் வைத்திருக்கிறேன் என்று விளக்கி இருந்தார்.

ஜப்பானில் கல்யாணம் முடிச்ச கையோட ஹனிமூன்.. நெப்போலியன் மகன், மருமகள் எங்க போறாங்க தெரியுமா?.. அடுத்து கோடிகளை இறக்கும் நெப்போலியன்.!

Popular film actor Napoleon’s son Dhanush and Akshaya got married recently and the wedding was met with negative reviews. In this situation, the information about where these two are going to go for their honeymoon is coming out.

பல விமர்சனங்களுக்கு நடுவே தற்சமயம் நடிகர் நெப்போலியன் மகனான தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் நடைபெற்று இருக்கிறது நெப்போலியன் மகனான தனுஷ் பிறந்ததிலிருந்து ஒரு வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு எழுந்து நடக்க முடியாத ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு வைத்தியம் பார்த்து நெப்போலியன் பிறகு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

akshaya dhanush

பொதுவாகவே மாற்று திறனாளிகள் என்றால் சமூகத்தில் அவர்கள் மீது ஒரு கேலி என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தனுஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதும் அதிகமாகவே ஒரு பக்கம் கேளிக்கு உள்ளாக்கப்பட்டது.

ஹனிமூனுக்கு தயாராகும் ஜோடிகள்:

ஒரு பக்கம் தனுஷையும் நெப்போலியனையும் வாழ்த்தி பலர் பதிவிட்டு வந்தாலும் கூட இன்னொரு பக்கம் இதை விமர்சித்து வந்தனர். இவருக்கெல்லாம் எதற்கு கல்யாணம் என்பது போல இருந்தது அவர்களது பேச்சு.

akshaya dhanush

இருந்தாலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் நெப்போலியன் தற்சமயம் இந்த திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்து இருக்கிறார் திருமணம் நடந்த பொழுது ஆனந்த கண்ணீர் விட்ட நெப்போலியன் திருமணமாகி நான்கு வருடங்கள் எங்களுக்கு குழந்தை இல்லை ஒவ்வொரு முறையும் கரு கலைந்து கொண்டே இருந்தது.

அதனால் எப்பொழுதுமே தனுஷ் எங்களுக்கு ஒரு பொக்கிஷம்தான் என்று கூறியுள்ளார்.  இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அடுத்து சிங்கப்பூரில் இவர்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அங்கு சென்று விட்டுதான் பிறகு அவர்கள் அமெரிக்கா செல்ல இருக்கிறார்களா? ஹனிமூன் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் இருக்கும் எனவும் இதற்கே 5 கோடியிலிருந்து 10 கோடி வரை நெப்போலியன் செலவு செய்திருப்பதாகவும் ஒரு பேச்சுக்கள் இருக்கின்றன.

எதிர்பார்த்ததை விட நான்கு மடங்கு செலவாயிட்டு.. மகன் திருமணம் குறித்து பேசிய நெப்போலியன்.? இத்தனை கோடியா?.

Actor Napoleon was once a villainous actor in Tamil cinema. Napoleon went to America and settled down after the opportunities in cinema were reduced. Recently his son Dhanush got married.

நடிகர் நெப்போலியன் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தவர் ஆவார். அதன் மூலமாக அவருக்கு வரவேற்பும் அதிகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் இந்தியாவை விட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் அவருடைய மகன் தனுஷ் மாற்றுத்திறனாளியாக இருந்தார். அவர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இல்லை.

திரையரங்குகள், மளிகை கடைகள் என அனைத்திலும் வெளிநாடுகளில் மாற்று திறனாளிகளும் சென்று வருவதற்கான பாதை அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தியாவில் ரயில்வே ஸ்டேஷன்களில் கூட படிக்கட்டுகள் தான் போடப்பட்டிருக்கின்றன என்கிற சூழல் இருக்கிறது.

nepolean son

நெப்போலியன் மகன் திருமணம்:

இதனால் அமெரிக்காவில் சென்று செட்டிலானார் நடிகர் நெப்போலியன் அவ்வப்போது திரைப்படங்களில் நடிப்பதற்கு மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவரது மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. கோலகலமாக முடிந்த இந்த திருமணம் குறித்து சமீபத்தில் நெப்போலியன் பேசியிருக்கிறார். அப்பொழுது அவரிடம் திருமணத்திற்கான செலவு எவ்வளவு ஆனது என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நெப்போலியன் நம்ம ஊர் காசை விட அமெரிக்காவில் நான்கு மடங்கு அதிகமாக செலவாகும். ஆனால் அதைவிட 4 மடங்கு அதிகமாக டோக்கியோவில் செலவானது. அதனால் நாங்கள் போட்டு வைத்த கணக்கை விட அதிகமாக தான் வந்தது என்று கூறி இருக்கிறார்.

ஆனால் வெளிப்படையாக எவ்வளவு ரூபாய் செலவானது என்று கூறவில்லை ஆனால் சினிமா வட்டாரத்தினர் சிலர் கூறும் பொழுது 400 கோடி ரூபாய் இந்த திருமணத்திற்காக நெப்போலியன் செலவு செய்ததாக கூறுகின்றனர் இருந்தாலும் தன்னுடைய மகனுக்காக அதை அவர் கணக்கு செய்யவில்லை என்று நெப்போலியன் மனைவி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஒப்பில்லா நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்… ராணுவத்தில் என்ன பதவியில் இருந்தவர் தெரியுமா? யாரும் அறியாத தகவல்..!

Actor Delhi Ganesh was a leading actor in Tamil cinema. He has acted along with many famous actors in Tamil cinema. He has acted in many films mainly with Kamal Haasan. Delhi Ganesh passed away at the age of 80 due to deteriorating health

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர் நடிகர் டெல்லி கணேஷ். டெல்லி கணேஷ் தமிழில் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இயல்பாகவே அவருக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையின் காரணமாக தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். நேற்று இவருடைய உயிரிழப்பு என்பது தற்சமயம் தமிழ் சினிமாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஒரு பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது.

1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார் ராணுவத்தில் ஃபைட்டர் ஜெட் எனப்படும் விமானத்தை ஓட்டும் வீரராக இவர் இருந்து வந்தார்.

ராணுவத்தில் பதவி:

ராணுவங்களில் சில சமயங்களில் நாடகம் நடக்கும் அந்த நாடகங்களில் நடித்த டெல்லி கணேசுக்கு அப்போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. பிறகு விடுமுறைக்காக அவர் ஊருக்கு வந்தபோது திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

delhi ganesh

பிறகு ராணுவத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க திரை துறையின் மீது ஆர்வம் காட்டத் துவங்கினார் டெல்லி கணேஷ். மற்ற நடிகர்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வழங்க கூடியவராக டெல்லி கணேஷ் இருந்தார். பெரும்பாலும் நடிகர் கமல்ஹாசன் அவரைவிட சிறப்பாக நடிக்கக்கூடிய அல்லது அவருடன் போட்டி போட்டு நடிக்கக் கூடிய நடிகர்களுக்கு தான் அவரது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்குவார்.

சினிமாவில் வளர்ச்சி:

அப்படியாக கமல்ஹாசன் வாய்ப்புகளை வழங்கிய ஒரு சில நடிகர்களில் டெல்லி கணேஷ் முக்கியமானவர் டெல்லி கணேசனுக்கு தொடர்ந்து அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், நாயகன், அபூர்வ சகோதரர்கள், தெனாலி, காதலா காதலா, நம்மவர் இப்படி நிறைய திரைப்படங்களில் டெல்லி கணேஷ்க்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.

delhi ganesh

அப்போது பிரபலமாக இருந்த அனைத்து பெரிய நடிகர்களுடனும் டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார். பிறகு திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லாமல் போன காலகட்டங்களில் சின்ன திரையில் நடித்து வந்தார் டெல்லி கணேஷ். இந்த நிலையில் 80 வயதை தொட்டு இருக்கும் டெல்லி கணேஷ் நேற்று சென்னையில் உள்ள ராமாபுரத்தில் அவரது இல்லத்தில் 11 30 மணி அளவில் உயிரிழந்து இருக்கிறார்.

வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

எல்லாமே ஃப்ரீதான்.. சிம்கார்டே இல்லாமல் பேசலாம்..! அதிரடி தொழில்நுட்பத்தில் இறங்கிய பி.எஸ்.என்.எல்.. ஆடிப்போன ஜியோ, ஏர்டெல்.!

BSNL is already introducing 4G and 5G technologies in India. But beyond that, the facility of making calls without a SIM card is currently being introduced

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல், வி.ஐ மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களுமே தங்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன.

அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் மற்ற நிறுவனங்களை விடவும் பி.எஸ்.என்.எல் திட்டங்கள் குறைவாக இருக்கின்றன என்று பி.எஸ்.என்.எல்லுக்கு மாற துவங்கினர்.

எனவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற புதிய திட்டங்களையும் பி.எஸ்.என்.எல் அறிவித்து வந்தது. இருந்தாலும் பி.எஸ்.என்.எல் இன்னமும் அதிவேக 4ஜி மற்றும் 5ஜி இணைய வசதியை வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

புதிய தொழில்நுட்பம்:

அதனை தொடர்ந்து டாடா நிறுவனத்துடன் சேர்ந்து தற்சமயம் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க துவங்கியிருக்கிறது பி.எஸ்.என்.எல் தொடர்ந்து அடுத்து 5ஜி சேவையையும் அடுத்த வருட இறுதிக்குள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

bsnl

இந்த நிலையில் தனியார் சிம் நிறுவனங்களே ஆடிப் போகும் அளவிற்கான ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம். அதாவது மொபைல் போனில் சிம் கார்டை போடாமல் கால் செய்வது மற்றும் மெசேஜ் அனுப்புவதற்கான ஒரு வசதியை உருவாக்க இருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

விரைவில் வெளியாகும்:

இதற்காக வியாசாட் என்கிற ஒரு நிறுவனத்திடம் பேசி வருகிறது bsnl நிறுவனம். அதாவது மொபைல் போனில் எந்த சிம் கார்டும் போடாமல் சேட்டிலைட் உதவியுடனே கால்களை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

bsnl

இதற்கான சோதனை ஓட்டத்தை bsnl செய்த நிலையில் அதில் வெற்றியும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேவைகள் வரும் பட்சத்தில் அடர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் கூட போன் செய்வதற்கான சிக்னல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தும் நிலையில் தொழில்நுட்பத்தில் அது ஒரு புதிய பாய்ச்சலாக இருக்கும் மேலும் தனியார் நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அரசியலில் விஜய்யும் ரஜினியும் ஒண்ணு கிடையாது.. சூப்பர் ஸ்டாரை வைத்து செய்த இயக்குனர் அமீர்..!

Vijay, a famous actor in Tamil, started a party called T.V.K. After the party’s name and flag had already been announced, Vijay recently announced the party’s policies. Director Aamir has commented on this

தற்சமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு ஆதரவுகள் இருக்கின்றன.

மற்றொரு பக்கம் அதை எதிர்த்தும் பலரும் பேசி வருகின்றனர் விக்ரவாண்டியில் விஜய் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் மேலும் மக்கள் எதிர்பார்க்காத வகையில் பேச்சு ஒன்றை கொடுத்திருந்தார் விஜய்.

vijay tvk

பெரும்பான்மையான மக்களுக்கு விஜய்யின் இந்த பேச்சு பிடித்திருந்தது என்றாலும் அரசியல் சார்ந்து இருப்பவர்களுக்கு அது பிடிக்கவில்லை அவர்கள் பெரும்பாலும் கூறும் பொழுது சினிமாவில் வசனங்கள் பேசுவது போலவே மேடையிலும் வந்து பேசி இருக்கிறார் விஜய் என்பது அவர்களது குற்றச்சாட்டாக இருந்தது.

அமீர் கூறிய விஷயம்:

இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில் தான் விஜய்யின் பேச்சுக்கள் இருந்தன. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் பேசி இருந்தார். அவர் கூறும் பொழுது விஜய் முன்னெடுக்கும் அரசியல் ஆரோக்கியமானதாக தெரிகிறது.

அவர் அம்பேத்கர் பெரியார் அஞ்சலை அம்மாள் போன்றவர்களை தன்னுடைய தலைவர்களாக முன்னெடுக்கிறார். ஆனால் இதற்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அவர் ஆன்மீக அரசியல் என்று கூறினார்.

ameer

அதற்காக ராகவேந்திர ஸ்வாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் இவர் ராகவேந்திராவை இங்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மிக சொற்பமான நபர்கள் தான் ராகவேந்திரரை வணங்கி வந்தனர். எனவே அவரது அரசியல் தலைவராகவே ரஜினிகாந்த் ராகவேந்திராவை முன்னிருத்துகிறார். அந்த வகையில் பார்க்கும் பொழுது விஜயின் பார்வை தெளிவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் அமீர்.

விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழக அரசியலுக்கு அந்த ஆபத்து இருக்கு… வார்னிங் கொடுத்த போஸ் வெங்கட்.!

Popular Tamil actor Vijay started a party called T.V.K. Ever since he started the party, there have been many positive and negative reviews about Vijay. Actor Bose Venkat also expressed his opinion in that regard

விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அதற்கு ஆதரவான கருத்துக்கள் அதிகமாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரையும் அதன் கொடியையும் அறிவித்தார்.

எப்போது விஜய் கொடியை அறிவித்தாரோ அப்போதிலிருந்தே எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக உருவாக துவங்கின. ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது சரியா என்பது எப்போதுமே மக்கள் மத்தியில் இருந்து வரும் கருத்தாக தான் இருக்கிறது.

ஆனால் ஜனநாயக இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதால் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு என்பது ரசிகர்களின் கண்ணோட்டமாக இருந்து வருகிறது.

போஸ் வெங்கட்டின் கருத்து:

இதற்கு பலரும் பல விதமான விமர்சனங்களை அளித்து வந்த நிலையில் பிரபல சினிமா நடிகரான போஸ் வெங்கட்டும் விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவருமே விஜய்க்கு எதிர்மறையான கருத்துக்களை தான் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அது அதிக வைரலாக துவங்கி இருந்தது. பிறகு சமீபத்தில் போஸ் வெங்கட் பேட்டி கொடுத்தபொழுது அவர் சில விஷயங்களை விளக்கி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எப்படியும் தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய கட்சி நடிகர் விஜயுடன் கூட்டணி போடும்.

கூட்டணி போடும்போது துணை முதலமைச்சர் பதவி எங்களுக்கு வேண்டும் என்று கூறி தான் கூட்டணி போடுவார்கள். மேலும் சில ஜாதி கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. அவர்களும் கூட்டணி போடுவார்கள் அவர்களும்  அதிகாரத்தில் பங்கு கேட்பார்கள் அப்படி என்றால் 2026 தேர்தலே ஒரு கேள்வி குறி ஆக்கிவிடும் என்று கூறியிருக்கிறார் போஸ் வெங்கட்.

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் எனக்கு செஞ்சதுக்கு இப்ப கைமாறு செய்யுறேன்.. கமல் அந்த விஷயத்தை செய்ய இதுதான் காரணம்.!

Actor Kamal Haasan cannot praise the actors of the current generation that much. But now a days we can see that he is praising like that. He explained the reason for that.

விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு கமல்ஹாசன் மொத்தமாக மாறி இருப்பதை தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் பார்க்க முடியும். பெரும்பாலும் எந்த ஒரு நடிகரையும் புகழ்ந்து கமல்ஹாசன் மேடைகளில் பேசி பார்க்க முடியாது.

அப்படி அவர் பேசினாலும் கூட அவரை விட மூத்த நடிகர்களாக இருக்கும் சிவாஜி, ரஜினி போன்றவர்களைதான் பேசுவார். இல்லையென்றால் அவருக்கு சமமான நடிகர்களான ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை பற்றி பேசுவார்.

கமல்ஹாசன் அதை செய்ய காரணம்:

இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் பற்றி அவர் பெரிதாக பேசியது கிடையாது. ஆனால் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிப் பிறகு தொடர்ந்து இப்போது இருக்கும் நடிகர்களை வைத்து இயக்கும் திரைப்படங்களை தயாரிக்க துவங்கினார் கமல்ஹாசன்.

kamalhaasan

அப்படியாக அவர் இயக்கி வரும் திரைப்படங்கள் குறித்த ப்ரமோஷனில் பேசும்பொழுது அந்த நடிகர்களை புகழ்ந்து பேசி வந்தார் கமல்ஹாசன். ஏன் கமல் இப்படி செய்கிறார் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்கிறாரா? என்பது ஒரு கேள்வியாக மக்கள் மத்தியில் எழத் துவங்கியது.

இது குறித்து ஒரு மேடையில் பதிலளித்த கமல்ஹாசன் கூறும் பொழுது எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நல்ல நடிகர் என்று கூறி என்னை கைகாட்டி விட்டு சென்றார்கள். இப்பொழுது அந்த நன்றி கடனை நான் தீர்க்க வேண்டாமா? நான் இப்பொழுது யார் நல்ல நடிகர்கள் என்று காட்ட வேண்டாமா? அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

டேய் டைம் வேஸ்ட் பண்ணாம போடா..! ஐந்து முக்கிய நடிகர்களை வச்சு செய்த நடிகர் ஷியாம்..!

Actor Shyam was the most popular actor who made his debut in Tamil cinema in the year 2000. But within some time, his opportunities in cinema began to decrease. In a recent interview, Shyam said the reason for that

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஷியாம். நடிகர் ஷியாம் சினிமாவிற்கு வந்த போது அவர் மிகப்பெரிய நடிகராக மாறுவார் என்று தோன்றும் அளவிற்கு அவருடைய திரைப்படங்கள் இருந்தன.

அவர் நடித்த இயற்கை லேசா லேசா மாதிரியான நிறைய திரைப்படங்கள் அப்பொழுது நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. இருந்தாலும் கூட பிறகு நடிகர் ஷாமுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

புது முக நடிகர்கள் எண்ட்ரி:

shaam

காலப்போக்கில் ஷாம் சினிமாவில் பெரிதாக அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இப்பொழுது கதாநாயகனாக இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் கூட நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஏன் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அவர் கூறும் பொழுது 2002இல் நான் சினிமாவிற்கு அறிமுகமாகி படங்களில் நடிக்க துவங்கினேன். ஆனால் 2003 ஆம் ஆண்டில் துவங்கி தொடர்ந்து நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், ஜீவா, ஜெயம் ரவி என்று புதுமுக நடிகர்கள் சினிமாவிற்குள் களம் இறங்கினர்.

இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தயாரிப்பாளரின் மகனாகவோ அல்லது இயக்குனரின் மகனாகவோ இருந்தனர் பிரபலங்களின் மகன்கள் என்பதால் இவர்களுக்கு என்னை விட வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன இதனால் பெரிய பெரிய படங்களில் எனக்கு முன்பே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துவிட்டன என்று கூறியிருக்கிறார் நடிகர் ஷியாம்.

அங்க போய் ஒரு நாளாவது இருக்கணும்… ஏங்கும் சினிமா பிரபலங்கள்.. யாருக்கும் தெரியாத கமலின் ரகசிய அறை..! அப்படி என்ன இருக்கு?.

Actor Kamal Haasan has been a leading actor in Tamil cinema for a long time. It is said that there is a room in his house that every director would like. Let’s see about it in detail now.

எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான நபராக நடிகர் கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் சாதாரண நடிகர் என்பதையும் தாண்டி கமலஹாசன் திரைத்துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

திரைத்துறை சார்ந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டவர் கமல்ஹாசன். அதனால் கமல்ஹாசன் அளவிற்கு மற்ற நடிகர்களுக்கு சினிமாவை பற்றி தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு உலக சினிமா பலவற்றையும் பார்த்தவர் கமல்ஹாசன்.

அதனால்தான் கமல்ஹாசன் இயக்கும் படங்கள் அதிக வித்தியாசமானதாக இருக்கும். அதிக வசூல் கொடுக்க வேண்டும் என்பதை தாண்டி வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதுமே கமல்ஹாசனுக்கு உண்டு.

வீட்டில் உள்ள அறை:

kamalhaasan

இந்த நிலையில் கமல்ஹாசன் வீட்டில் இருக்கும் ஒரு அறை குறித்து சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி ஒரு விஷயத்தை கூறிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது கமல்ஹாசன் வீட்டில் ஒரு தனி திரையரங்கு இருக்கிறது.

அந்த திரையரங்கில் உலகில் உள்ள பல முக்கிய திரைப்படங்களின் டிவிடிகள் மலை போல குவிக்கப்பட்டிருக்கும் அந்த படங்கள் எல்லாம் இணையத்தில் தேடினால் கூட கிடைக்காது. அப்படிப்பட்ட படங்கள் எல்லாம் அங்கு இருக்கும்.

நாம் எந்த படங்களை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் இருக்கும் பலருக்கும் இப்படியான படங்களை பார்க்கும் ஆசை இருக்கும். ஆனால் அந்த படங்கள் எல்லாம் கிடைக்காது ஒருவேளை கமல்ஹாசனின் அந்த அறைக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் எல்லா இயக்குனர்களும் அதற்கு வரிசை கட்டி நிற்பார்கள் என்று கூறி வருகின்றனர்.