ஒப்பில்லா நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்… ராணுவத்தில் என்ன பதவியில் இருந்தவர் தெரியுமா? யாரும் அறியாத தகவல்..! - Cinepettai

ஒப்பில்லா நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்… ராணுவத்தில் என்ன பதவியில் இருந்தவர் தெரியுமா? யாரும் அறியாத தகவல்..!

Actor Delhi Ganesh was a leading actor in Tamil cinema. He has acted along with many famous actors in Tamil cinema. He has acted in many films mainly with Kamal Haasan. Delhi Ganesh passed away at the age of 80 due to deteriorating health

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர் நடிகர் டெல்லி கணேஷ். டெல்லி கணேஷ் தமிழில் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இயல்பாகவே அவருக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையின் காரணமாக தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். நேற்று இவருடைய உயிரிழப்பு என்பது தற்சமயம் தமிழ் சினிமாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஒரு பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது.

1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார் ராணுவத்தில் ஃபைட்டர் ஜெட் எனப்படும் விமானத்தை ஓட்டும் வீரராக இவர் இருந்து வந்தார்.

ராணுவத்தில் பதவி:

ராணுவங்களில் சில சமயங்களில் நாடகம் நடக்கும் அந்த நாடகங்களில் நடித்த டெல்லி கணேசுக்கு அப்போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. பிறகு விடுமுறைக்காக அவர் ஊருக்கு வந்தபோது திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

delhi ganesh
delhi ganesh

பிறகு ராணுவத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க திரை துறையின் மீது ஆர்வம் காட்டத் துவங்கினார் டெல்லி கணேஷ். மற்ற நடிகர்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வழங்க கூடியவராக டெல்லி கணேஷ் இருந்தார். பெரும்பாலும் நடிகர் கமல்ஹாசன் அவரைவிட சிறப்பாக நடிக்கக்கூடிய அல்லது அவருடன் போட்டி போட்டு நடிக்கக் கூடிய நடிகர்களுக்கு தான் அவரது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்குவார்.

சினிமாவில் வளர்ச்சி:

அப்படியாக கமல்ஹாசன் வாய்ப்புகளை வழங்கிய ஒரு சில நடிகர்களில் டெல்லி கணேஷ் முக்கியமானவர் டெல்லி கணேசனுக்கு தொடர்ந்து அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், நாயகன், அபூர்வ சகோதரர்கள், தெனாலி, காதலா காதலா, நம்மவர் இப்படி நிறைய திரைப்படங்களில் டெல்லி கணேஷ்க்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.

delhi ganesh

அப்போது பிரபலமாக இருந்த அனைத்து பெரிய நடிகர்களுடனும் டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார். பிறகு திரைத்துறையில் வாய்ப்புகள் இல்லாமல் போன காலகட்டங்களில் சின்ன திரையில் நடித்து வந்தார் டெல்லி கணேஷ். இந்த நிலையில் 80 வயதை தொட்டு இருக்கும் டெல்லி கணேஷ் நேற்று சென்னையில் உள்ள ராமாபுரத்தில் அவரது இல்லத்தில் 11 30 மணி அளவில் உயிரிழந்து இருக்கிறார்.

வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version