சாட் ஜிபிடியை ஓரம் தள்ளிய சீனா.. Qwen AI vs ChatGPT எது பெஸ்ட்..

ஏ.ஐயின் பயன்பாடு என்பது முன்பை விடவும் இப்போது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம். ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் இணையத்தில் தேடுவோம். ஆனால் இப்போது எது குறித்தும் ஏ.ஐயிடம் கேட்க கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

பெரும்பாலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஏ.ஐயாக சாட் ஜிபிடி இருந்து வருகிறது. ஆனால் சில கட்டுபாடுகளுடன் தான் சாட் ஜிபிடி இயங்கி வருகிறது. இதற்கு நடுவே சாட் ஜிபிடியை இலவசமாக பயன்படுத்தும் பயனர்களுக்கு குறைந்த அளவிலான சலுகைகளே கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 5 மணி நேரத்திற்கு 20 இல் இருந்து 30 மெசேஜ் மட்டுமே சாட் ஜிபிடியில் செய்ய முடியும். அதே போல  10 படங்களுக்கும் குறைவான அளவில்தான் புகைப்படங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

புகைப்பட பதிவேற்றத்தை பொறுத்தவரை அதிகப்பட்சம் 5 படங்களைதான் ஏற்ற முடியும். விடீயோ உருவாக்கும் திறன் சாட் ஜிபிடிக்கு இல்லை.

ஆனால் அதற்கு போட்டியாக அலிபாபா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஏ.ஐதான் குவன். Qwen AI இன்னும் திறம்பட நிறைய சலுகைகளை இலவச பயனர்களுக்கு வழங்குகிறது.

சாட் செய்வதை பொறுத்தவரை ஒருநாளில் குவேனுடன் எவ்வளவு வேண்டுமானாலும் பேசி கொள்ளலாம். அதே போல ஒரு நாளில் மட்டும் 300 புகைப்படங்களை குவேன் ஏ.ஐயில் உருவாக்கி கொள்ள முடியும். சாட் ஜிபிடியுடன் கம்பேர் செய்யும்போது அந்த அளவிற்கு திறம்பட இது இமேஜ்களை உருவாக்குவது இல்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் குவேன் திறம்பட செயல்படும் என நம்பப்படுகிறது.

அடுத்ததாக வீடியோ உருவாக்கத்தை பொறுத்தவரை 5 வீடியோ வரை ஒரு நாளைக்கு இலவசமாக குவென் ஏ.ஐயில் செய்ய முடிகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version