ஏழை பெண்களை அந்த மாதிரி காட்டுறது தப்பு.. ராயன் படம் குறித்து வார்னிங் கொடுக்கும் பத்திரிக்கையாளர்!..
Raayan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் பா. பாண்டியன் படத்திற்குப் பிறகு ராயன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் அந்தப் படத்தில் நடிகராகவும் நடித்தார். இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. பா. பாண்டியன் திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கப் போகும் ராயன் படம் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ராயன் திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
பலரும் நேர்மறையான கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் ஒரு சிலர்கள் படத்தில் சில காட்சிகள் உண்மைக்கு மாறாக உள்ளது எனவும் கூறியிருந்தார்கள். அதனைப் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருப்பதைப் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ராயன் திரைப்படம்
ராயல் திரைப்படம் நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரின் நடிப்பில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளிவந்த தமிழ் ஆக்ஷன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், சந்தீப் கிருஷ்ணன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், எஸ். ஜே. சூர்யா, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஏழைப் பெண்களை இவ்வாறு காட்டுவது தவறு
படத்தில் நடித்த துஷாரா,அபர்ணா பாலமுரளி ஆகிய நடிகைகள் ஏற்று நடித்த கதாபத்திரமானது ஒரு குடிசை பகுதியில் வாழும் ஏழைப் பெண்கள் கொண்ட கதாபாத்திரமாக இவர்கள் நடித்திருந்தார்கள். இதில் சில காட்சிகளில் ஏன் இவ்வாறு இவர்கள் காட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. அதில் தனுஷின் தங்கையாக இருக்கும் பெண் குடிகாரராக இருக்கும் நடிகர் சந்தீப் கிருஷ்ணனை சாராயக்கடை எல்லாம் தேடிச்சென்று காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
மேலும் அந்த காட்சியில் சந்தீப் கிருஷ்ணன் குடித்துவிட்டு சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் கதவை தட்டுவார். அப்பொழுது அந்தப் பெண்ணின் அப்பா இளவரசு கதையை திறவு திறக்கும் பொழுது, அந்தப் பெண்ணின் அப்பா அவரை திட்டுவார். உடனே அவரை அந்த குடிசையில் தள்ளிவிட்டு அந்தப் பெண்ணிற்கு, இவர் வைத்திருந்த ஒரு மதுபாட்டில் எடுத்துக் கொடுப்பார். உடனே அவள் மறுப்பு தெரிவிக்காமல் அதனை குடித்து விடுவாள். அதன் பிறகு ஒரு பாடல் ஒன்று இடம்பெறும். மேலும் அந்த பாடலுக்கு இருவரும் நடனம் ஆடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது என்ன காட்சி தனக்கு புரியவில்லை என அவர் கூறியிருக்கிறார். ஒரு பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பெண்கள் இவ்வாறு செய்வார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பிருக்கிறார்.
அடுத்ததாக அந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறுவார். அவர் கூறிய நான்கு. ஐந்து மாதங்களில் ஒரு குழந்தையை கொண்டு வச்து தனுஷ் கையில் ஒப்படைத்துவிட்டு இது உங்கள் குழந்தை என்று கூறிவிட்டு அவள் சென்று விடுவாள். எந்த தாயும் இவ்வாறு செய்ய மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது இந்த காட்சிகள் எல்லாம் ஏன் படத்தில் இடம்பெற்றது என கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறு குடிசை பகுதியில் வாழும் ஏழை பெண்களை காட்சிப்படுத்துவதா? என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.