திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.! - Cinepettai

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளியாக இரண்டு நிகழ்ச்சிகள்தான் விஜய் டிவியை இன்னமும் தமிழ் சின்னத்திரை சேனல்களில் தனித்துவமானதாக காட்டி வருகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் ஜனவரி மாதம் முடிந்தது. இனி அடுத்து இந்த வருடத்தின் இறுதியில்தான் பிக் பாஸ் சீசன் 9 துவங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மீண்டும் துவங்கி தன்னுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது. ஆனால் அதை யாரும் பார்க்கவில்லை.

ஏனெனில் ஒளிபரப்பான காலகட்டத்திலேயே அனைவரும் அதை பார்த்துவிட்டனர் என்பதால் பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் கலர்ஸ் டிவி சேனல் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி உள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version