சிவகார்த்திகேயன் எனக்கு பண்ணுன துரோகம்!.. மனம் உடைந்த டி.இமான்!.. என்னவா இருக்கும்!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சாதரண தொகுப்பாளராக விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது பெரும் முயற்சியால் தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

மனம் கொத்தி பறவை இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதன் பிறகு எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற் நல்ல கதைகளை தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நன்றாக உயர துவங்கியது.

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரியான படங்களுக்கு இசையமைத்தவர் டி.இமான். இந்த பாடல்கள் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பையே பெற்று தந்தது. சொல்ல போனால் இருவரும் நல்ல பழக்கத்தில்தான் இருந்தனர்.

ஆனால் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய டி.இமான் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுக்கு நான் பாடல் இசையமைக்க மாட்டேன். அதற்கான வாய்ப்புகளே வந்தாலும் கூட நான் அதை செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏன் அவ்வாறு கூறுகிறார் என அவரிடம் கேட்கும்போது சிவகார்த்திகேயன் எனக்கு பெரும் துரோகம் செய்துள்ளார்.

அதை நான் எங்கும் வெளியில் சொல்ல முடியாது என அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் இமான். இதனால் என்ன துரோகமாக இருக்கும் என யோசனையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.