தமிழில் வெளியான Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle… அனிமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

அனிமே ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வரும் சீரிஸ்களில் மிக முக்கியமான சீரிஸாக டீமன் ஸ்லேயர் இருந்து வருகிறது. டீமன் ஸ்லேயர் கதையை பொறுத்தவரை ஜப்பான் நாட்டிலே இரவு நேரங்களில் மனிதர்களை வேட்டையாடும் ஜந்துக்கள் இருந்து வருகின்றன.

அவற்றை வேட்டையாடும் குழுதான் டீமன் ஸ்லேயர். இவர்கள் இந்த ஜந்துக்களை வேட்டையாட தனிப்பட்ட பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். சிறப்பான சக்திகளையும் கொண்டவர்கள். டாஞ்சிரோ என்கிற சிறுவன் நேரடியாக இந்த ஜந்துக்களால் பாதிக்கப்படுகிறான்.

அதனை தொடர்ந்து அவன் டீமன் ஸ்லேயர் குழுவில் இணைகிறான். அதனை வைத்து இதன் கதை செல்கிறது. இந்த நிலையில் Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle என்கிற கடைசி பாகம் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் மொழியிலும் கூட இது திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து இதன் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version