நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா பற்றிய விஷயம் தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தனுஷ் நயன்தாரா இருவருமே வெகு காலங்களாக நண்பர்களாக இருந்தவர்கள் தான்.
ஆனால் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. நானும் ரவுடிதான் திரைப்படம் ஆறு கோடி பட்ஜெட்டில் உருவாவதாக இருந்தது. அந்த திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்து வந்தார்.
ஆனால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது படத்தின் மொத்த செலவு 17 கோடியை தாண்டி இருந்தது. இதனால் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தாலும் கூட தனுஷுக்கு அந்த திரைப்படம் தோல்வியை தான் தந்தது.
தனுஷ் நயன்தாரா பிரச்சனை:
அதிலிருந்து தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க துவங்கிய பிறகு தனுஷ் மொத்தமாக இவர்களிடம் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா குறித்த ஆவணப்படம் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. அந்த படத்தில் நானும் ரவுடிதான் திரைப்பட காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன அதற்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ் குடும்பம் பிரிவதற்கு இந்த சம்பவம்தான் முக்கிய காரணம் என்று ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நானும் ரவுடிதான் திரைப்படம் துவங்கும் பொழுது விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை இல்லை.
எனவே அந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனுஷ் கேட்காமல் அந்த படத்தை தயாரித்து படமும் நஷ்டம் அடைந்தது. அதிலிருந்துதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் தனுஷ்க்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை காரணமாக கொண்டுதான் தனுஷ் தற்சமயம் பலி வாங்கி வருவதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.