Cinema History
உயிரையும் பொருட்படுத்தாமல் தனுஷ் நடித்த அந்த 2 காட்சிகள்!.. கஷ்டம்தான்!..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கஷ்டபடாமல் நடிக்கும் நடிகர்களும் உண்டு. உயிரை கொடுத்து கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகர்களும் உண்டு விக்ரம் மாதிரியான நடிகர்கள் திரைப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதை பார்க்க முடியும்.
அந்த வகையில் நடிகர் தனுஷும் வித்தியாசமான நடிப்புக்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அதனால்தான் தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் வரை சென்று நடித்த நடிகராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் நடிக்கும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது அதற்கு போட்டியாக தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானது ஆனால் அப்போதும் அந்த திரைப்படத்திற்கு ஓரளவு வசூல் கிடைத்தது.
தனுஷ் சில கடினமான காட்சிகளை போராடி நடித்துள்ளார் அதில் முக்கியமான இரண்டு காட்சிகள் ஏன் கூறப்படுகிறது என்றால் தனுஷிற்கு உயரம் என்றால் மிகவும் பயம். உயரத்தில் நின்றாலே அவருக்கு தலையைச் சுற்றி கொண்டு வந்து மயக்கம் போட்டு விழுந்து விடுவார் அப்படி இருக்கும்பொழுது உயரமான காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.
தொடரி திரைப்படத்தில் அவர் ரயிலின் உச்சியில் ஏறி நடந்து செல்வது போன்ற காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் நடிப்பதென்றால் கண்டிப்பாக அவர் மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்கிற நிலை இருந்தது. உடனே இயக்குனர் அதற்கு ஏற்றார் போல தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அந்த காட்சியை படமாக்கினார்.
இருந்தும் எந்த மறுப்பும் சொல்லாமல் தனுஷ் அந்த காட்சிகளில் நடித்தார். அதன் பிறகு அனேகன் திரைப்படத்தில் ராட்டினம் சுற்றும் காட்சி ஒன்றில் உயரத்தில் நடிக்க வேண்டியது இருந்தது. இருந்தாலும் அதை பற்றி எந்த கவலையும் படாமல் தனுஷ் அந்த காட்சியில் நடித்தார்.
இது குறித்து நடிகர் ஜெகன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது எனக்கு தண்ணீர் என்றால் பயம். நீச்சல் காட்சிகள் நடிக்க வேண்டும் என்று தண்ணீரில் இறக்கி விட்டாலே நாம் மூழ்கி விடுவேன். அந்த அளவிற்கு எனக்கு அதில் பயம். அப்படி இருக்கும் பொழுது உயரத்தைக் கண்டு இவ்வளவு பயம் இருந்தும் எப்படி அதில் தனுஷ் இப்படி நடிக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று ஜெகன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.