Latest News
எம்.ஜி.ஆர் மாதிரிதான் விஜய்யும்!.. இப்போதே அதிமுகவின் இருந்து கிடைத்த ஆதரவு!.
இந்த வருடம் துவங்கியது முதலே அரசியலில் அதிகமாக பேசப்படும் நபராக விஜய் இருந்து வருகிறார். இந்த வருட துவக்கத்தில்தான் விஜய் தனது கட்சியை துவங்கினார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டார். இந்த நிலையில் மேலும் அதிரடியாக 2026 தேர்தலுக்கு பிறகு இனி நடிக்க போவதில்லை எனவும் விஜய் கூறியுள்ளார்.
இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் கூட அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் ஓரளவு இளைஞர் பட்டாளத்தை கைக்குள் வைத்திருக்கும் நடிகராக நடிகர் விஜய் இருந்து வருகிறார்.
இதற்கு நடுவே பலருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார் விஜய். பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் என தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறார் விஜய்.
இந்த நிலையில் அரசியல் கட்சிகளே தங்கள் கட்சிகளோடு விஜய் கூட்டணி போட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் பிரபல அரசியல் பிரமுகரான செல்லூர் ராஜு சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் எம்.ஜி.ஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவரக்ளுக்கும், மக்களுக்கும் செலவழிக்க நினைக்கிறார் என பேசியிருந்தார்.
இது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.