basil joseph: தற்சமயம் மலையாளத்தில் உள்ள பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் பாசில் ஜோசப். பொதுவாக அதிக உயரம், கட்டுமஸ்தான தேகம் எல்லாம் இருந்தால்தான் ஹீரோ ஆக முடியும் என்று ஒரு எழுதப்படாத விதி உண்டு.
அதை உடைத்து சினிமாவில் நடிப்பு மட்டுமே முக்கியம். நடிக்க தெரிந்த எவரும் கதாநாயகன் ஆகலாம் என காட்டியவர் நடிகர் பாசில் ஜோசப். வெறும் 5 வருடங்களிலேயே எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பாசில் ஜோசப்.
பெரும்பாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதை அம்சங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அதுவே அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்க காரணமாக இருக்கிறது. அவரது இயக்கத்தில் வந்த படங்களுக்குமே நல்ல வரவேற்பு உண்டு.

2021 ஆம் ஆண்டு பாசில் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மின்னல் முரளி. சூப்பர் ஹீரோ திரைப்படமாக வெளிவந்த மின்னல் முரளி திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு கதாநாயகனாக அதிக வரவேற்பை பெற்றதால் பாசில் ஜோசப் பெரிதாக திரைப்படங்களை இயக்கவில்லை.
ஆனால் அவர் நடித்த ஜெய ஜெய ஜெய ஹே, பெலிமி, குருவாயூர் அம்பலநடையில் மாதிரியான நிறைய படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. இந்நிலையில் தற்சமயம் அடுத்து மீண்டும் திரைப்படங்கள் இயக்க உள்ளார் பாசில் ஜோசப்.
இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சினிமாவிற்கு வரும்போதே நான் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் சூழ்நிலை காரணமாக நடிகராக தொடர்ந்து நடிக்க வேண்டி இருந்தது.
ஆனால் மறுபடியும் நான் திரைப்படங்கள் இயக்குவதிலேயே ஆர்வமாக இருக்கிறேன் என கூறியுள்ளார் பாசில் ஜோசப்.







