விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

நடிகர் விஜய் நடித்த படங்களில் நிறைய படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. இப்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் தவறவிட்ட திரைப்படங்களில் சில சிறப்பான திரைப்படங்களும்  உண்டு.

அப்படியான ஒரு திரைப்படம்தான் யோகன்: அத்தியாயம் ஒன்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆங்கிலத்தில் காமிக்ஸ், திரைப்படம் என வெளிவந்து மிகவும் பிரபலமடைந்த லார்கோ வின்ச் என்கிற கதையின் தழுவலாகவே இந்த படம் எழுதப்பட்டது.

படத்தின் கதைப்படி நியூ யார்க் நகரில் ஒரு பிரபல திருடனாக விஜய் இருந்துவருகிறார். இந்த நிலையில் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். நிறுவனத்தின் அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் அந்த நிறுவனத்தை கைப்பற்றுகின்றனர்.

அப்போதுதான் வக்கீல் மூலமாக ஒரு உண்மை தெரிகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யாருக்கும் தெரியாமல் ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்துள்ளார். அவந்தான் அந்த நிறுவனத்தின் அடுத்த வாரிசு. அது வேறு யாருமல்ல விஜய்தான்.

நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் விஜய் தனது தந்தையின் மர்ம சாவுக்கு காரணமானவர்களை கண்டுப்பிடிப்பதை வைத்து இந்த படத்தின் கதை நகரும் என இருந்தது. ஆனால் அந்த படம் நியூயார்க் நகரில் நடப்பதாக கதை இருந்தது.

இதனால் விஜய்க்கு அப்போது அதிக வசனங்கள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. அது விஜய்க்கு அவ்வளவாக ஒத்து வரவில்லை. அதனை தொடர்ந்து பாதியிலேயே அந்த படத்தின் படப்பிடிப்பானது நின்று போனது. ஆனாலும் இப்படி ஒரு மாஸ் கதையில் விஜய் நடிக்கவில்லையே என்கிற கவலை விஜய் ரசிகர்களுக்கு உண்டு.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.