Connect with us

எப்போதும் பிஸிதான் போல – துணிவு வெளியானதுமே அடுத்த படம் கமிட் ஆன ஹெச்.வினோத்!

Latest News

எப்போதும் பிஸிதான் போல – துணிவு வெளியானதுமே அடுத்த படம் கமிட் ஆன ஹெச்.வினோத்!

cinepettai.com cinepettai.com

தமிழில் தற்சமயம் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹெச்.வினோத். அஜித்தை வைத்து இது ஹெச்.வினோத்திற்கு மூன்றாவது திரைப்படமாகும்.

இதற்கு முன்னரே நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ஹெச்.வினோத். தற்சமயம் துணிவு திரைப்படம் வெளியாகி  திரையரங்குகளில் ஹிட் அடித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க இருந்தார் ஹெச்.வினோத். ஆனால் விஜய் சேதுபதி வேறொரு படத்தில் கதாநாயகனாக கமிட் ஆகி இருப்பதால் அடுத்து தனுஷை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளார் ஹெச்.வினோத்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட எழுத்து வேலைகள் முடிந்துவிட்டன என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளார் தனுஷ்.

இதில் நடிகர் விஜய் சேதுபதியும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

POPULAR POSTS

jayam ravi fan
cook with comali season 4 cook list
mohan g dry ice
murali
lingusamy rajinikanth
vishal
To Top