Connect with us

அந்த படத்துல ஜெயலலிதா வேண்டாம்!.. எம்.ஜி.ஆர் எவ்வளவு முயற்சி செய்தும் அனைத்தையும் தவிடு பொடியாக்கிய இயக்குனர்!..

mgr and jayalalitha

Cinema History

அந்த படத்துல ஜெயலலிதா வேண்டாம்!.. எம்.ஜி.ஆர் எவ்வளவு முயற்சி செய்தும் அனைத்தையும் தவிடு பொடியாக்கிய இயக்குனர்!..

cinepettai.com cinepettai.com

MGR and Jayalalitha : எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பொறுத்தவரை பொதுவாக எம்.ஜி.ஆர். அவரது படங்களில் யார் யார் நடிக்க வேண்டும். யார் யார் இசையமைக்க வேண்டும் என்று படத்தை குறித்த மொத்த விஷயத்தையும் அவர்தான் தேர்வு செய்வார்.

இதனால் பெரும் தயாரிப்பாளர்கள் கூட அவருடன் சேர்ந்து படம் செய்வதற்கு யோசித்து வந்தனர். அப்போது மிகப் பிரபலமாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம் கூட எம்.ஜி.ஆரை வைத்து அன்பே வா என்கிற ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் தான் தயாரித்தது. அதற்கு காரணம் இதுதான்.

ஏ.வி.எம் நிறுவனத்தை பொறுத்தவரை அவர்கள் படத்திற்கான இயக்குனர்கள் இசையமைப்பாளர் போன்றவற்றை தயாரிப்பு நிறுவனம்தான் தேர்ந்தெடுக்கும். ஆனால் எம்.ஜி.ஆரிடம் அதற்கு மாற்று கருத்து இருப்பதால் ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படம் அதிகமாக எடுக்கவே இல்லை.

இதே பிரச்சனையை 1967 இல் வந்த காவல்காரன் திரைப்படத்திலும் இருந்தது. காவல்காரன் திரைப்படத்தை இயக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் பி.நீலகண்டன் ஜெயலலிதாதான் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

MGR-3
MGR-3

ஏனெனில் அப்பொழுது ஜெயலலிதா எம்.ஜி.ஆர் காம்போ நல்ல வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரை பொருத்தவரை அந்த கதாபாத்திரம் சரோஜாதேவிக்குதான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர்.

இதனால் படப்பிடிப்பு துவங்கும் பொழுதே சரோஜாதேவியை வரவழைத்துவிட்டார் எம்.ஜி.ஆர். பொதுவாக சரோஜாதேவி அவர் நடிக்காத ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு வரவே மாட்டார். இதனால் சரோஜாதேவியின் வருகையை ஒட்டி அந்த திரைப்படத்தில் அவர்தான் கதாநாயகி என்றெல்லாம் செய்திகள் பரவ துவங்கின.

இருந்தாலும் விடாப்படியாக இருந்த இயக்குனர் பி நீலகண்டன் தொடர்ந்து ஜெயலலிதாவை வைத்து படப்பிடிப்பை துவங்கினார். முதலில் இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் கூட ஜெயலலிதாவை அவரே வேண்டாம் என்று கூறுவது ஜெயலலிதாவிற்கும் அவளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்த படத்தில் நடித்தார்,

ஆனால் படம் வெளியான பொழுது இயக்குனர் நினைத்தது போலவே எம்ஜிஆர் ஜெயலலிதா காம்போ நல்ல வெற்றியை கொடுத்தது.

To Top