அண்ணா என்ன விட்றங்கண்ணா! – விஜய் சேதுபதியை நொந்து போக செய்த இயக்குனர்..!
ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சொல்லப்போனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை காட்டிலும் வில்லனாக நடிக்கும் மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்களே மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுகின்றன.
தற்சமயம் அவர் நடித்து வெளியான ஃபார்சி என்னும் டிவி சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடித்த படங்களில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காதலை கருவாக கொண்ட திரைப்படம்.
96 படத்தில் விஜய் சேதுபதியின் ராம் எனும் கதாபாத்திரம் ஊர் உலகமெல்லாம் சுற்றும் ஒரு வாலிபன். அந்த ஊர் சுற்றலில் மகிழ்ச்சியை காணும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தலாம் என முடிவு செய்திருந்தார் இயக்குனர் பிரேம் குமார்.
ஆனால் விஜய் சேதுபதிக்கு பயணம் என்றாலே அவ்வளவாக பிடிக்காது. படத்தின் முதல் பாடலான வாழா என் வாழ்வை வாழவே பாடலுக்காக இந்தியா முழுவதையும் சுற்ற போகிறோம் என விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார் இயக்குனர்.
முதலில் நான்கு நாட்கள் அந்தமானில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து எங்கு போகிறோம் என கேட்டுள்ளார் விஜய் சேதுபதி. கல்கத்தா செல்கிறோம் என இயக்குனர் கூறியுள்ளார். அதற்கு பிறகு சென்னை வருவோமா? என ஆவலாக கேட்டுள்ளார் விஜய் சேதுபதி. இல்லை சார் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர்,மணாலி இந்த இடம் எல்லாம் சென்றுவிட்டுதான் சென்னை வருகிறோம் என இயக்குனர் கூறியுள்ளார்.
இதை கேட்டதும் இவ்வளவு பெரிய பயணமா? என நொந்துள்ளார் விஜய் சேதுபதி. இவ்வளவு பயணமும் 5 நிமிட பாட்டுக்காக நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பிரேம் குமார் ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை கூறியுள்ளார்.