பறந்து போ திரைப்படம் 9 நாள் வசூல் நிலவரம்.. எதிர்பார்த்த அளவு இல்லையே..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம். இவர் ஏற்கனவே இயக்கிய கற்றது தமிழ், பேரன்பு, தரமணி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களை கொண்டதாக இருந்தது.

இயக்குனர் ராமை பொருத்தவரை வாழ்க்கை சார்ந்த நிறைய விஷயங்களை தனது திரைப்படத்தில் பேசுபவராக இருப்பார். ஆனால் கமர்சியலாக அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது பெரிதாக கிடைத்திருக்காது.

இந்த நிலையில் ஒரு காமெடி கதை களத்தை கையில் எடுத்து ராம் சமீபத்தில் இயக்கிய திரைப்படம் தான் பறந்து போ. வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான ஆசைகள் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.

நடிகர் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக அமைந்து இருக்கிறது. முதல் நாளிலேயே அதிக வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் 9 நாட்களில் 7.2 கோடி வசூல் செய்து இருக்கிறது.

ஆனால் படத்திற்கு கிடைத்த வரவேற்புடன் ஒப்பிடும் பொழுது படத்திற்கு வந்த வசூல் கொஞ்சம் குறைவாக தான் தெரிகிறது என்கின்றனர் ரசிகர்கள்.

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version