ஓவியா தவறான பழக்கங்களுக்கு செல்ல இதுதான் காரணம்!.. ரகசியத்தை உடைத்த பிரமுகர்!.
Oviya: சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒரு சில நடிகை, நடிகர்கள் நன்றாக பயன்படுத்தி தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பார்கள். மேலும் அறிமுகமான திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த பல நடிகைகள் உள்ளார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஓவியா. இவர் தமிழ் சினிமாவில் “களவாணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஒரு பதிவானது அனைவராலும் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
நடிகை ஓவியா
“களவாணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மேலும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு திருச்சூரில் பிறந்த இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் ஓப்பனாக பேசும் ஓவியாவின் குணத்தை மக்கள் ரசித்தார்கள். இதன் பிரதிபலிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ஓவியா.
அந்த சீசன் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் ஓவியா. அவரின் சேட்டைகளையும், குறும்புகளையும் ரசித்த ரசிகர்கள் அவருக்கு ஆர்மி ஒன்றை தொடங்கி விட்டார்கள். அந்த அளவிற்கு பிக் பாஸில் ஓவியாவிற்கு பல ரசிகர்கள் சேர்ந்தார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி பாதிலேயே வெளியேறிவிட்டார்.
“களவாணி” படத்திற்குப் பிறகு ஓவியாவிற்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த ஒரு படமும் அமையவில்லை. ஆனால்பிக் பாஸுக்கு பிறகு ஓவியா பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அவருக்கு அதே நிலை தொடர்ந்தது.
சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா
இந்நிலையில் ஓவியா சில நாட்களுக்கு முன்பு மது அருந்துவது போல பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்தப் புகைப்படத்தின் கீழ் “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு” என்று கேப்ஷன் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த அவர் ரசிகர்கள் வருத்தத்துடன் ஏன் ஓவியா இவ்வாறெல்லாம் செய்கிறார் என பலரும் பலவித கமெண்ட்களை பதிவு செய்து வந்தார்கள்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ஓவியா ஏன் இவ்வாறு செய்தார் என்பதை விளக்கியுள்ளார். அதில் ஒரு சில நடிகர் நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத போது தங்களை என்டர்டைன்மென்ட் செய்து கொள்வதற்காக இதுபோல செய்வார்கள். ஒரு சிலர் அவுட்டிங் செல்வார்கள், படம் பார்ப்பார்கள் மற்றும் சிலர் இதுபோல செய்வார்கள். தங்களுடைய தனிமையை போக்குவதற்காக இதுபோல செய்வார்கள். மேலும் அவரின் தாயாரின் உடல் நலத்தின் காரணமாக கூட அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஓவியா தைரியமான பெண் அதனால் இது போன்ற நிகழ்வெல்லாம் அவரை பாதிக்காது என கூறினார்.
மேலும் அவர் கூறும் பொழுது நடிகர், நடிகைகள், ஆண், பெண் என யாராக இருந்தாலும் குடிப்பது என்பது தவறான பழக்கம். எனவே செலிபிரிட்டியாக இருக்கும் யாரேனும் இதுபோல செய்வதால் அது மக்கள் மத்தியில் பிரபலமடையும். எனவே இது போன்ற செயல்களை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் ஓவியா 24 மணி நேரமும் குடித்தால் இது போன்ற புகைப்படங்களை எல்லாம் பதிவிட மாட்டார். விளையாட்டாக கூட இவ்வாறு செய்திருக்கலாம். அது தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை, மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என பிரபல பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.