ஜப்பானிய அனிமேஷன் தொடர்களுக்கு ஏற்கனவே இந்தியாவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் தற்சமயம் பிரபலமாகி வருகிறது நருடோ சீரிஸ்.

ஏற்கனவே மகாட்டோ சிங்காய் என்னும் இயக்குனரின் அனிமே திரைப்படங்களுக்கு இளைஞர் பட்டாளம் மத்தியில் வரவேற்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழில் வெளிவந்திருக்கும் நருடோ சீரிஸ் நெருப்பு போல ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மசாஷி கிஷிமோடா என்னும் எழுத்தாளர் எழுதிய காமிக்ஸ் தொடரான நருடோ 1999 இல் வெளிவந்து ஜப்பானில் பிரபலம் அடைந்தது. இதனையடுத்து இது டிவி சீரிஸாக எடுக்கப்பட்டது. 2002 முதல் இது டிவி சீரிஸாக வந்துக் கொண்டுள்ளது.
இந்த சீரிஸின் கதைப்படி நிஞ்சாக்கள் வாழும் கிராமம் ஒன்றை ஒன்பது வால் கொண்ட நரி ஒன்று தாக்கி கொண்டிருக்கும். அந்த நரியை யாராலும் அடக்க முடியாது. அப்போது அந்த நரியை அடக்கும் ஒரு கிராமத்தினர் அதன் உயிர் சக்தியை ஒரு குழந்தையின் உடலில் செலுத்துவிடுவர். அந்த குழந்தைதான் நருடோ உசுமாக்கி.
நருடோ சுட்டித்தனமான ஒரு நிஞ்சா சிறுவன். அதே சமயம் தனது உடலில் அதிகப்பட்சமான சக்திகளை கொண்டவன். ஆனால் நருடோவிற்கு அதை பயன்படுத்த தெரியாது. இந்த நிலையில் அவன் எப்படி ஒரு மாஸ்டர் நிஞ்சாவாகிறான் என்பதாக கதை செல்கிறது.
சுவாரஸ்யமான இந்த அனிமேஷன் தொடர் ஏற்கனவே இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்நிலையில் இந்த தொடரை வாங்கிய சோனி யே என்னும் கார்ட்டூன் சேனல் தற்சமயம் இந்த தொடரை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறது.
இதனாக் 2கே கிட்ஸ் மத்தியில் தற்சமயம் பிரபலமாக உள்ளது நருடோ டிவி சீரிஸ்.