News
எங்களுக்குதான் ரசிகர் மன்ற ஷோ.! விக்ரம் படத்திற்காக மோதும் மூன்று ஹீரோக்களின் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விக்ரம்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சூர்யா ஒரு சிறிய காட்சி மட்டும் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ள நிலையில் இந்த படத்தை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் இப்போதே திரையரங்குகளில் ரசிகர் ஷோ ஏற்பாடு செய்ய சொல்லி கேட்க தொடங்கியுள்ளார்களாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், விஜய் சேதுபதி, சூர்யா ரசிகர்களும் தங்களுக்குதான் ரசிகர் மன்ற ஷோ டிக்கெட்டுகளை தர வேண்டும் என கேட்டு வருகிறார்களாம்.
ஒரு படத்திற்கு மூன்று ஹீரோக்களின் ரசிகர்கள் ரசிகர் ஷோ டிக்கெட் கேட்டு போட்டிப் போடுவது இதுவே முதல்முறை என்பதால் தியேட்டர்கள் குழப்பத்தில் உள்ளனவாம்.
