8 வருசமா நீண்டுக்கிட்டு இருந்த நாடகம் இன்னிக்கு முடிஞ்சி இருக்கு மக்களே..!

90ஸ் கிட்ஸ்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த காலங்களில்  மதிய உணவு வேளையில் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வரும்போது சந்திரலேகா என்ற பாடல் காதில் விழுவதை தடுக்க முடியாது. இன்னும் இரண்டு வருடம் ஓடியிருந்தால் ஒரு தசாப்த்தத்திற்கு ஓடிய சீரியலாக கின்னஸ் சாதனை படைத்திருக்கும் சந்திரலேகா.

ஆம் 6 அக்டோபர் 2014 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கிய ஒரு நாடகம்தான் சந்திரலேகா. இன்றைய நாள் 08.10.2022 அன்று இந்த நாடகம் நிறைவடைந்தது. 8 ஆண்டுகளாக ஓடிய இந்த சீரியலை இதுவரை 11 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகிய சீரியல்களில் அதிக நாட்கள் ஓடிய சீரியலாக சந்திரலேகாதான் இருக்கும் என நம்பப்படுகிறது.

இதுவரை இந்த நாடகம் 2304 எபிசோட்கள் வெளியாகியுள்ளது. இந்த நாடகம் இலங்கையிலும் கூட வசந்தம் என்கிற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது. 2014 இல் கல்லூரிக்கு சென்றவர்கள் அம்மாவோடு நாடகத்தை பார்த்தவர்கள் கூட இந்நேரம் குடும்பமாகி தன் மனைவி, பிள்ளையோடு பார்க்க கூடிய ஒரு சிறப்பை பெற்ற9 நாடகமாக சந்திரலேகா இருக்கும்.

சந்திரலேகா நாடகத்தின் முடிவால் இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள் என கூறலாம். எப்படி இருந்தாலும் சந்திரலேகா நாடகம் மீது வெறுப்பாக இருந்தவர்கள் இன்று கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.

Refresh