நேர்ல கூட போய் கூப்பிடல!.. ஆனா எனக்காக வந்து நின்னாரு!.. விஜய் சேதுபதியால் மனம் உருகிய குட் நைட் மணிகண்டன். - Cinepettai

நேர்ல கூட போய் கூப்பிடல!.. ஆனா எனக்காக வந்து நின்னாரு!.. விஜய் சேதுபதியால் மனம் உருகிய குட் நைட் மணிகண்டன்.

Good night Manikandan: குட் நைட் மணிகண்டன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்சமயம் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நாயகர்களாக உருவாகி வரும் நடிகர்களில் குட் நைட் மணிகண்டனும் ஒருவர்.

இவர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார். ஆனால் இப்பொழுதுதான் அவருக்கு கதாநாயகன் ஆவதற்காக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவரது சினிமா வாழ்க்கையில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம்.

manikandan
manikandan

ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடியினர் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகுதான் குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

குட் நைட் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன. இவருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இடையே வெகு நாட்களாகவே பழக்கம் உண்டு. காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் மணிகண்டன் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

ஆதரவு அளித்த விஜய் சேதுபதி:

இந்த நிலையில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தப்போது விஜய் சேதுபதி அவருக்கு அளித்த ஆதரவை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மணிகண்டன். முதல் படமான குட் நைட் திரைப்படத்தை முடித்துவிட்டு அந்த திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதியை அழைக்க நினைத்தார் மணிகண்டன்.

வெளியீட்டு விழாவிற்கு முதல் நாள், அண்ணா சென்னையில் இருந்தீர்கள் என்றால் நாளை எனது படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வர முடியுமா? என்று மட்டும் மெசேஜ் செய்திருக்கிறார் மணிகண்டன். அதன் பிறகு அவரது மொபைல் ஆஃப் ஆகி விட்டது.

vijay-sethupathi

அந்த சமயத்தில் பலமுறை அவருக்கு போன் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. பிறகு வீட்டிற்கு வந்த பிறகுதான் மணிகண்டன் போனை ஆன் செய்துள்ளார். அதில் விஜய் சேதுபதி போன் செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அவருக்கு போன் செய்துள்ளார்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி, டேய் விழா எங்க நடக்குதுன்னு அட்ரஸ் சொன்னாதானடா வர முடியும். எனக்கு அட்ரஸை அனுப்பு நாளைக்கு வரேன் என கூறியுள்ளார். இதனை பேட்டியில் கூறிய மணிகண்டன் நான் நேரில் சென்று கூட அவரிடம் கூறவில்லை. ஆனாலும் எனக்காக வந்து நின்றார் விஜய் சேதுபதி அண்ணா. அதுதான் அவர் மனசு என பேசியிருந்தார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version