பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் சைப் அலிகான் மிக முக்கியமான ஒரு நடிகர் ஆவார்.
இவர் நவாப் வம்சத்தை சேர்ந்த மன்னர்களில் ஒருவராக இருந்து வருகிறார் இப்போதும் கூட ஒரு கிராமத்தின் மன்னராக இவர் இருந்து வருகிறார். இந்திய விடுதலைக்கு பிறகு மன்னராட்சி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்றாலும் கூட சின்ன சின்ன ஜமீன் பரம்பரைகள் தொடர்ந்து அதே மரியாதையுடன் அந்த ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படியாகத்தான் வாழ்ந்து வருகிறார் நடிகர் சைஃப் அலிக்கான். இவரிடம் பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கின்றன. அவர் ராஜ வம்சம் என்பதால் அவரிடம் பூர்வீக சொத்துக்களே நிறைய இருக்கின்றன.
ஆனாலும் திரைத்துறையில் சேர்ந்ததன் மூலமாக இன்னும் அவர் சொத்துக்கள் இப்பொழுது அதிகமாக இருக்கின்றன என்று நான் கூற வேண்டும். இந்த நிலையில் அவரது சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு அரசு முடிவு எடுத்து இருக்கிறது.
இந்திய விடுதலைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற குடிமக்களின் சொத்துக்களை எதிரி சொத்துக்கள் என்று கருதி கையகப்படுத்தியது இந்திய அரசு. அந்த வகையில் சைஃப் அலிகானின் முன்னாள் தலைமுறையினர் ஏற்கனவே பாகிஸ்தான் சென்றுவிட்டதால் இந்த சொத்துக்களை எதிரி சொத்துக்கள் என்று நிர்ணயத்து கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதனை எதிர்த்து சைஃப் அலிகான் மனுதாக்கல் செய்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு நவாப் சொத்துக்களை அரசு கையகப்படுத்தலாம் என்று சட்டம் இயற்றப்பட்ட காரணத்தினால் இப்பொழுது அவருடைய 15 ஆயிரம் கோடி சொத்துக்களையும் கையகப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.