நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ஐடண்டிட்டி. நடிகை த்ரிஷா மற்றும் வினய் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் வந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் தனி இடத்தை பிடித்துள்ளர்து ஐடண்ட்டிட்டி திரைப்படம்.
படத்தின் கதைப்படி டொவினோ தாமஸ் சிறு வயதில் இருந்தே எந்த ஒரு விஷயத்தையும் நேர்த்தியாக செய்யும் திறன் வாய்ந்தவராக இருந்து வருகிறார். ஒரு கொலை குற்றத்தில் கூட குற்றவாளியை அவரால் எளிதாக கண்டுப்பிடித்துவிட முடியும்.
இந்த நிலையில் த்ரிஷா டொவினோ குடியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு வருகிறார். ஒரு பத்திரிக்கையாளராக இருந்த த்ரிஷா பெண்களை கடத்துபவர்கள் குற்றங்களை அறிவதற்காக ஒரு பழைய பில்டிங்கிற்கு செல்கிறார்.
அங்கே ஒருவன் செய்யும் கொலையையும் அவர் பார்க்கிறார். அந்த கொலையை செய்தவன் முகம் அவருக்கு நினைவில் இருக்கிறது. ஆனாலும் கூட தலையில் அடிப்பட்டதால் அவரால் அந்த முகத்தை நினைவுக்கூற முடியவில்லை.
ஆனால் உண்மையில் அந்த கொலையை செய்தது டொவினோ தாமஸ்தான் ஏன் டொவினோ அந்த கொலையை செய்தார். அதற்கு பின்னால் என்ன விஷயம் இருக்கிறது. இதையெல்லாம் அடிப்படையாக கொண்டு ட்விஸ்ட்களாக கொண்டு செல்கிறது ஐடண்ட்டிட்டி திரைப்படம்.
இதற்கு நடுவே நிறைய புது விஷயங்கள் படத்தில் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
படத்தில் ஏரோப்ளேனில் சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனாலும் கூட 12 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது. Zee 5 ott இல் இந்த படம் கிடைக்கிறது.