பஞ்சு அருணாச்சலம் பிறந்தநாளில் பஞ்சாயத்து? – பிரபல இயக்குனரை மதிக்காத இளையராஜா?

பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவராவார். பல தமிழ் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர்.

வருடா வருடம் பஞ்சு அருணாச்சலத்தின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் தற்சமயம் உயிரோடு இல்லாத போதிலும் கூட அவர் திரைதுறைக்கு செய்த நன்மைகள் காரணமாக பலரும் இவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 18 ஆம் தேதி இவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அப்படி இந்த வருடமும் கூட அவரது பிறந்தநாள் நடைப்பெற்றது?. அப்போது அதில் பல பிரபலங்களும் கலந்துக்கொண்டனர். இசைஞானி இளையராஜாவும் கூட கலந்துக்கொண்டார்.

அப்போது அதில் கலந்துக்கொண்ட இளையராஜா சில சர்ச்சையான விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. அதில் அவர் கூறும்போது கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு நிகரான ஒரு கவிஞர் என்றால் அது பஞ்சு அருணாச்சலம் மட்டும்தான் என கூறினார்.

வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களும் இருக்கும்போது இளையராஜா ஏன் இப்படி என கூறினார் என்கிற கேள்வி எழுந்தது?

அதற்கு பிறகு பாரதி ராஜா பேச வந்தபோது இளையராஜா வேகமாக எழுந்து வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாராம். இதனால் இளையராஜா பாரதிராஜாவை மதிக்கவில்லை என்கிற கருத்து நிலவி வந்தது.

Refresh