News
சீன சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் – பாராட்டும் சீன பெண்
சமீபத்தில் வெளி வந்த நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் பலவும் வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது. அவர் நடித்து வெளிவந்த சூரரை போற்று திரைப்படமானது தற்சமயம் பல தேசிய விருதுகளை பெற்றது.
அதே போல அவர் நடித்த ஜெய் பீம் எனும் திரைப்படமானது அமெரிக்காவின் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படமாக இருந்தது. மேலும் சமூகத்தில் நிகழும் அவலங்களையும் ,சமூக நீதியையும் அழுத்தி கூறும் படமாகவும், அதே சமயம் உண்மைக்கதையின் தழுவலாகவும் இருந்த காரணத்தாலும் வெகுவான பாராட்டுக்களை பெற்று வருகிறது ஜெய் பீம்.

இதனால் இந்திய சினிமாவில் முக்கியமான கதாநாயகர்களில் நடிகர் சூர்யாவுக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது.
தற்சமயம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டு திரைப்படங்களும் அதில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் அந்த விழாவில் திரையாகியுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவது ஒரு சிறப்பான நிகழ்வாகும். தமிழ் பேசும் சீன பெண் ஒருவர் ஜெய் பீம் படத்தை பாராட்டி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் அந்த வீடியோவை காணலாம். https://twitter.com/Raj_twetz/status/1558814982732521474
