இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் தற்சமயம் டி சி நிறுவனம் உருவாக்கி வரும் திரைப்படம்தான் சூப்பர் மேன்.
இதற்கு முன்பு நிறைய முறை சூப்பர் மேன் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன ஏற்கனவே மூன்று முறை சூப்பர் மேன் கதை படமாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் கதாநாயகன் மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர்.
இறுதியாக மேன் ஆஃப் ஸ்டீல் என்கிற திரைப்படம் வந்தது. அதற்கு பிறகு மீண்டும் சூப்பர் மேன் கதாபாத்திரத்திற்கு ஆள் மாற்றி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
சூப்பர் மேன் படங்களை பொறுத்தவரை எல்லா படங்களிலும் கதைக்களம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். க்ரிப்டோ கிரகத்தில் பிறக்கும் குழந்தை பூமியில் பறக்கும் சக்தியையும் இன்னும் பல அற்புத சக்திகளையும் பெற்று அதன் மூலம் மக்களை காப்பாற்றுகிறார் என்பதாக தான் சூப்பர் மேன் கதைக்களம் இருக்கும்.
லெக்ஸ் லூதர் என்கிற ஒரு தொழிலதிபர் தான் சூப்பர்மேனுக்கு வில்லனாக இருப்பார். இந்த படத்திலும் அப்படித்தான் இருக்கிறது ஆனால் சண்டை காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளில் அதிகமாக வேலை பார்த்திருக்கிறார் ஜேம்ஸ் கன். இதுவரை வந்த சூப்பர் மேன் திரைப்படங்களில் இருந்து இந்த படம் வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.