அம்முன்னு எழுதுனான்னா, அவனை ஆபிசுக்கு வர சொல்லுங்க!.. பத்திரிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயலலிதா!..

Jayalalitha : தமிழ் திரை பிரபலங்களில்  ஒரு நடிகை தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்தார் என்றால் அது நடிகை ஜெயலலிதா மட்டும்தான். அவருக்கு பிறகு வேறு யாரும் முதலமைச்சர் பதவியை தமிழ்நாட்டில் பிடிக்கவில்லை.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பிடித்து கடைசியில் தமிழ்நாட்டுக்கே முதல்வராகி இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டதால்தான் அவரை இரும்பு பெண் என்று பலரும் அழைப்பதுண்டு.

ஜெயலலிதாவை பொருத்தவரை கொஞ்சம் கோபக்காரர் என்று தான் பலரும் கூறுவார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கோபப்பட்டு உடனடியாக முடிவுகளை எடுக்க கூடியவர். இதனால் பத்திரிகைகள் கூட ஜெயலலிதாவை பற்றி எழுதுவதற்கு மிகவும் பயந்தனர்.

jayalalitha

அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் பள்ளி பருவம் குறித்து அவர் படித்த பள்ளியில் சென்று விசாரித்த ஒரு பத்திரிகையாளர் அதை ஒரு கட்டுரையாகவே எழுதினார். பள்ளி படிக்கும் காலங்களில் ஜெயலலிதா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை விளக்கும் வகையில் அந்த கட்டுரை இருந்தது.

அதில் அவர் ஜெயலலிதாவை அம்மு என்று குறிப்பிட்டு இருந்தார் அம்மு என்பது ஜெயலலிதாவின் செல்ல பெயராகும். எம்.ஜி.ஆர் எப்போதும் அவரை அம்மு என்றுதான் அழைப்பார். அப்படியாக நெருங்கிய வட்டத்தில் உள்ள சிலர் மட்டுமே அவரை அம்மு என்று அழைப்பார்கள்.

அப்படி இருக்கும் பொழுது ஒரு முதலமைச்சரின் செல்ல பெயரை பகிரங்கமாக பத்திரிகையில் வெளியிட்டு விட்டாரே என்று அவர் மீது பலரும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் அந்த பத்திரிகையாளரை ஜெயலலிதாவே கூப்பிட்டு அனுப்பி இருந்தார்.

அந்த பத்திரிகையாளரும் பயத்துடனே சென்று ஜெயலலிதாவை பார்த்தார் பரவாயில்லை என்னுடைய பால்ய கால கட்டங்களை மிகவும் சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள் இது என்னுடைய ஆசிரியர்களுக்கு ஒரு வெகுமதியாக அமையும் என்று நன்றி கூறி இருக்கிறார் ஜெயலலிதா. இதை அந்த பத்திரிக்கையாளர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.