தொடர்ந்து டைனோசர் திரைப்படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. உலக அளவில் டைனோசர் படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றன.
அப்படியாக சமீபத்தில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜுராசிக் வேர்ல்ட் என்கிற திரைப்படம் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அடுத்து வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜான்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட ஜுராசிக் பார்க் இரண்டாம் பாகத்தின் கதையை போலவே இருக்கிறது.
டைனோசர்களின் டி.என்.ஏவை எடுப்பதற்கு ஜுராசிக் பார்க் தீவுக்கு செல்லும் கூட்டம் எப்படி அங்கிருந்து தப்பித்து வருகிறது என்பதுதான் கதையாக இருக்கிறது.
ஆனால் முன்பிருந்த ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் இருந்து மாற்றமாக இதில் நிறைய புது வகையான டைனோசர்கள் காட்டப்பட்டுள்ளன இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.