Connect with us

அந்த குட்டி பையனா இவரு? Cinema-வ விட்டதுக்கு காரணம் இதுதான் – காஜா ஷெரீப்பின் காரசாரமான நேர்காணல்

Latest News

அந்த குட்டி பையனா இவரு? Cinema-வ விட்டதுக்கு காரணம் இதுதான் – காஜா ஷெரீப்பின் காரசாரமான நேர்காணல்

cinepettai.com cinepettai.com

எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அது போல தான்,  தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக கருதப்படும் மகேந்திரன் இயக்கிய  உதிரிப் பூக்கள் திரைப்படத்தில் அழகிய கண்ணே.. அரும்புகள் நீயே பாடல் மூலம் அப்பாவி முகமும், அழகிய தோற்றமும் கொண்டு காண்போர் நெஞ்சை கலங்க வைத்தவர் மாஸ்டர் காஜா ஷெரீப்.

அதன்பின் பாக்யராஜ் நடித்து வெளியான ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் அவருக்கு சிஷ்யனாக வரும்  காஜா ஷெரீபை யாராலும் மறக்க முடியாது. மேலும் பாக்யராஜூடன் மீண்டும் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்திலும் நடித்திருந்தார்.

இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரால் அடுத்த கமல்ஹாசன் என்று புகழப்பட்டவர்தான் காஜா ஷெரீப். சில ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்த இவர் தற்போது இவர், தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். 

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், சிவாஜி,ரஜினி, விஜயகாந்த் என பலருடன் நடித்து இருக்கிறேன். நான் கலராக இருந்ததால், ஹீரோவாகலாம் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நான் காமெடியனாகத்தான் இருக்க ஆசைப்பட்டேன். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன்.புதிய வார்ப்புகள் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 1,500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது எனக் கூறியுள்ளார். 

மேலும் பேசிய அவர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என மூன்று முதல்வரிகளிடமும் பரிசு வாங்கி இருப்பதாகவும் இதுவரை 200க்கும் மேற்பட்ட விருதை என் வீட்டில் வைத்து இருப்பதாகவும் கூறினார். இருந்தும் சினிமாவில் தான் நினைத்த இடத்தை அடைய முடியாததற்கு காரணம் தனது உயரம் எனவும் நடித்து நடித்து சலித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார். 

இவர் குடிப்பழக்கத்தால் தான்  சினிமா வாய்ப்பை தவறவிட்டதாக பேசிவருபர்களுக்கு, அப்படி சொல்பவர்கள் யாராவது எனக்கு வாங்கி கொடுத்தார்களா… என்னை பிடிக்காதவர்கள் என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள் என தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். 

POPULAR POSTS

ilayaraja bharathiraja
ajith
karthik subbaraj cv kumar
ajith
kamalhaasan lingusamy
vengatesh bhat
To Top