Connect with us

சோத்துக்கு வழி இல்லாமல் ரயிலில் பிச்சை எடுத்த குழு!.. அதைதான் சிவாஜி படத்தில் வைத்தோம்!. கலைஞானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.

sivaji ganesan kalaignanam

Cinema History

சோத்துக்கு வழி இல்லாமல் ரயிலில் பிச்சை எடுத்த குழு!.. அதைதான் சிவாஜி படத்தில் வைத்தோம்!. கலைஞானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.

cinepettai.com cinepettai.com

Sivaji Ganesan :  சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராஜபார்ட் ரங்கத்துரை அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் ஆரம்ப காட்சியில் சின்ன பிள்ளையாக இருக்கும் ரங்கத்துரை கதாபாத்திரம் ரயிலில் பாடல் பாடி பிச்சை எடுப்பதாக காட்சிகள் வரும்.

ரசிகர்கள் பலரது மனதை உருக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும். அப்படியான அனுபவம் ஒன்று திரை பிரபலம் கலைஞானம் வாழ்க்கையிலும் அமைந்துள்ளது. கலைஞானம் ஆரம்பத்தில் நாடக கம்பெனி நடத்தி வந்தப்போது கொஞ்சம் வறுமையில்தான் இருந்தார். அப்போது ஒருமுறை பெங்களூரில் இரண்டு இடங்களில் நாடகம் நடத்துவதற்காக அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

நாடக குழுவை அழைத்துக்கொண்டு அனைவரும் பெங்களூர் கிளம்பினர். அப்போது அங்கு முதல் நாடகம் முடிந்தப்போதே கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டனர். ஆனால் அவர்கள் இரண்டாம் நாடகத்தின் இடைவேளையில் தருவதாக கூறினார்கள்.

பிறகு இரண்டாம் நாடக இடைவேளையில் கேட்கும்போது சில்லரைகளை எண்ணி கொண்டுள்ளோம். நாடகம் முடியும்போது தருகிறோம் என கூறினர். ஆனால் நாடகம் முடிந்தப்போது அந்த நாடக ஏஜெண்டுகளை காணவில்லை. இதனால் கலைஞானத்தின் குழுவினர் கலக்கமுற்றனர்.

அப்போது அங்கிருந்த தமிழர் ஒருவர் அவர்களது நிலையை அறிந்து அவர்களுக்கு காலை உணவை வாங்கி கொடுத்து ரயிலிலும் ஏற்றிவிட்டார். ஆனால் மதியத்திற்குள் சென்னை செல்ல வேண்டிய ரயில் செல்லாத காரணத்தினால் மதியம் அனைவருக்கும் பசிக்க துவங்கியது.

குழுவில் உள்ள குழந்தைகள் அழ துவங்கிவிட்டனர். உடனே வேறு வழியின்றி குழுவில் உள்ள இசை குழுமம் பாடல் பாடி ரயிலில் பிச்சை எடுத்து உணவு உண்டுள்ளனர். இந்த நிகழ்வை தனது வாழ்வில் மறக்க முடியாது என கலைஞானம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top