சினிமா வரலாறு: ஏத்திவிட்ட இயக்குனர் மீது கோபமடைந்த கமல்.. சாமி விஷயத்தில் வந்த சண்டை.!

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக ஒன்றை செய்யக்கூடியவர் கமல்ஹாசன்.

அதனாலேயே கமல்ஹாசன் ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்கள் மீது எப்போதுமே சினிமாவில் இருப்பவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால் இவர்களே மிக மரியாதையாக பார்க்கும் பாலச்சந்தர் மாதிரியான பிரபலங்களில் எஸ் பி முத்துராமன் முக்கியமானவர்.

எஸ்.பி.எம் இவர்கள் இருவரையும் வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் எஸ்.பி.எம் க்கும் கமலுக்குமே பஞ்சாயத்து வந்த சம்பவங்களும் தமிழ் சினிமாவில் இருந்து வந்தன.

கமல்ஹாசன் வெகு காலங்களாகவே நாத்திகத்தை பின்பற்றி வருவதாக கூறி கொண்டிருந்தார். எனவே சினிமாவில் நடக்கும் பூசைக்களில் எல்லாம் அவர் கலந்துக்கொள்ள மாட்டார். அதே சமயம் மற்றவர்களை சாமி கும்பிடக்கூடாது என வற்புறுத்தவும் மாட்டார்.

kamalhaasan
kamalhaasan

ஆனால் நாத்திகத்தை பின்பற்றுவதன் காரணமாக யாராவது அவரை பரிகாசம் செய்தால் கமல்ஹாசனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. நிலைமை இப்படியிருக்க ஒரு நாள் பூஜை நடந்துக்கொண்டிருந்தப்போது கமல் ஒதுங்கி நின்றார்.

அதனை பார்த்த எஸ்.பி.எம் கமலை பார்த்து சிரித்தார். இது கமல்ஹாசனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே எஸ்.பி.எம்மிடம் சென்ற கமல்

என்ன சார் நெத்தியில் விபூதி வைத்துக்கொண்டு அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என பாடிய நான் இப்போது ஒதுங்கி நிற்கிறேன் என சிரிக்கிறீர்களா? என கோபமாக கேட்டுள்ளார்.

அதற்காக ஏன் நான் சிரிக்க போகிறேன். அதற்கு வருத்தமல்லவா பட வேண்டும் என்றுள்ளார் எஸ்.பி.எம்

அப்படி என்றால் சிரித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார் கமல். இல்லை பரம பக்தரான ஸ்ரீனிவாசனின் பிள்ளை நீ நாத்திகவாதியாக இருக்கிறார். கடைந்தெடுத்த நாத்திகரின் மகன் நான் தெய்வ பக்தியில் இருக்கிறேன்.  அதை நினைத்துதான் சிரித்தேன் எனக் கூறியுள்ளார் எஸ்.பி.எம்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version