நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கண்ணப்பா. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவனுக்காக தனது கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனார் என்கிற பக்தரின் கதைதான் இந்த திரைப்படம்.
ஆரம்பத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருக்கும் கண்ணப்பன் எப்படி சிவ பக்தனாக மாறுகிறார் என விளக்குகிறது திரைப்படம். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தியாவில் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களில் முக்கிய படமாக கண்ணப்பா படம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெளியான இரண்டே நாட்களில் 23 கோடி வசூல் செய்துள்ளது கண்ணப்பா திரைப்படம். வரும் நாட்களில் இதன் வசூல் இன்னமும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.