Connect with us

ஏதோ தெரியாம பேசிட்டேன்… அதுக்காக இப்படியா வச்சு அடிக்கிறது!.. மனம் திறந்த கார்த்தி!.

karthi

Cinema History

ஏதோ தெரியாம பேசிட்டேன்… அதுக்காக இப்படியா வச்சு அடிக்கிறது!.. மனம் திறந்த கார்த்தி!.

cinepettai.com cinepettai.com

Tamil actor Karthi : தமிழ் சினிமாவிற்கு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அவரது முதல் படமே பெரும் வெற்றியை கொடுத்ததை அடுத்து வரிசையாக படம் நடிக்க துவங்கினார் கார்த்தி. அவற்றில் பல படங்கள் அவருக்கு வெற்றியை பெற்று தந்தன.

தற்சமயம் அவரின் 25 ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி பெற்று வருகிறது. கார்த்தி 25 படங்களில் நடித்ததை அடுத்து அவர் அதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கார்த்தி பேசும்போது அவர் முன்பு ஒரு விழாவில் பேசிய விஷயம் குறித்து கேட்கப்பட்டது. முன்பு ஒருமுறை கார்த்தி தெலுங்கில் ஒரு விழாவில் பேசும்போது தமிழ் சினிமா ரசிகர்களை விடவும் தெலுங்கு சினிமா ரசிகர்களை உயர்த்தி பேசியிருந்தார்.

அந்த நிகழ்வு குறித்த விளக்கம் அளித்த கார்த்தி கூறும்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வந்தப்போது தமிழ் சினிமாவில் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. யாருமே அந்த படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நிலையில் தெலுங்கில் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் அப்போது இருந்த மனநிலையில் தெலுங்கு ரசிகர்களை புகழ்ந்து பேசினேன்.

ஆனால் அதற்காக இப்போது வரை என்னை வச்சி அடிக்கிறது நியாயமா என கேட்டுள்ளார் கார்த்தி!..

To Top