ஐயா இங்கிட்டு தாமரை மலருமா ஐயா!.. மேடையில் ரங்கராஜ் பாண்டேவை வைத்து செய்த கரு பழனியப்பன்!.

பிரபலங்களுக்கு நடுவே அரசியல் கருத்துக்கள் தொடர்பான மோதல் என்பது நடக்கும் பொழுது அது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்து வரும் என்று கூறலாம்.

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவர்தான் கரு பழனியப்பன். பலருக்கும் இவரை ஜீ தமிழில் வெளியான தமிழா தமிழா நிகழ்ச்சியின் மூலமாக தெரியும்.

ஆனால் அதற்கு முன்பே தமிழில் திரைப்படங்கள் இயக்குவது வசனங்கள் எழுதுவது என்று பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார் கரு.பழனியப்பன் அதை தாண்டி அரசியல் ரீதியாக அதிக அறிவை கொண்டவர் என்பதால்தான் அவருக்கு ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

ஜீ தமிழில் பிரபலம்:

தமிழா தமிழா நிகழ்ச்சியை கிட்டத்தட்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சிக்கு இணையான ஒரு நிகழ்ச்சியாக கொண்டு வந்தார் கரு பழனியப்பன். பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிலிருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில் தந்தி டிவியின் மூலமாக அறிமுகமாகி தற்சமயம் பாஜகவின் முக்கிய உறுப்பினராக இருக்கும் ரங்கராஜ் பாண்டேவை மேடையில் வைத்து கிண்டல் செய்யும் வகையில் கேள்விகளை கேட்டு இருக்கிறார் கரு பழனியப்பன்.

சரமாரியாக கேள்வி:

அதில் அவரிடம் கேட்கும் பொழுது உங்களது ஆதரவு பிஜேபிக்கு தானா என்று நேரடியாக கேட்டார் கரு பழனியப்பன். ஆனால் அந்த ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத ரங்கராஜ் பாண்டே ஒருவர் எந்த கட்சிக்கு ஆதரவாளிக்கிறார் என்று கேட்பது அவர் எந்த கட்சிக்கு ஓட்டு போடுகிறார் என்று கேட்பது போல அது ஒரு ரகசியமான விஷயம் எனவே கேட்கக்கூடாது என்று மழுப்பி இருந்தார் ரங்கராஜ் பாண்டே.

அதேபோல கரு பழனியப்பன் கேட்கும் கேள்விகள் எதுக்குமே ரங்கராஜ் பாண்டேவால் பதில் சொல்ல முடியவில்லை அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கரு பழனியப்பனை பாராட்டி வருகின்றனர்.