அதிக நடிப்பு திறமையைக் கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் கென் கருணாஸ். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்து அதன் மூலம் அதிக பிரபலம் அடைந்தார் .
அசுரன் திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது குறைவுதான் என்றாலும் கூட சிறப்பான நடிப்பை அந்த திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து திரைப்படம் இயக்குவது மீது இவருக்கு ஆர்வம் இருந்தது சில படங்களில் உதவி இயக்குனராகவும் கென் கருணாஸ் பணிபுரிந்து இருக்கிறார். கென் கருணாஸ் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கு இப்பொழுது முயற்சி செய்து வருகிறாராம்.
இந்த நிலையில் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் எந்த ஒரு நடிகரும் தன்னுடைய முதல் திரைப்படத்தை தானே இயக்கி அறிமுகமாக மாட்டார்கள். இதற்கு முன்பு நடிகர் பிரதீப் ரங்கநாதன் இதே மாதிரி லவ் டுடே திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து அறிமுகமானார்.
ஆனால் இயக்குனராக அது அவருக்கு மூன்றாவது திரைப்படம் ஆகும் கென் கருணாஸை பொருத்தவரை அவரது அறிமுக படமே இப்பொழுது நடிக்கும் படம் தான் என்னும் பொழுது இது கொஞ்சம் பெரிய ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது.