எனக்கு செஞ்ச ரெண்டு சத்தியத்தையுமே இவர் காப்பாத்தலை.. உதயநிதி குறித்து மனைவி கொடுத்த ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இப்பொழுது அரசியலிலும் முக்கிய நபராக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் சினிமாவின் மீது ஆர்வமே இல்லாமல்தான் இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது சினிமா அரசியல் இரண்டிலுமே முக்கியமானவராக இவர் மாறியிருக்கிறார்.

உதயநிதி மனைவி சொன்ன விஷயம்:

இந்த நிலையில் இவரது மனைவி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசும் பொழுது உதயநிதி ஸ்டாலின் குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின் என்னை காதலிக்கிறேன் என்று கூறியபொழுது அவரிடம் நான் நீங்கள் அரசியலுக்கு செல்ல மாட்டீர்கள் என்றால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன்.

அவரும் நான் அரசியல் மீதெல்லாம் ஈடுபாடு காட்டுவது கிடையாது எனவே அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார். ஆனால் அந்த சத்தியத்தை அவர் காப்பாற்றவில்லை. அதேபோல சினிமாவிலும் அவர் நடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

திடீரென்று பார்த்தால் சினிமாவிலும் சென்று நடிக்க துவங்கிவிட்டார் நாங்கள் காதலித்தபோது இருவருமே பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்போம். அப்போதெல்லாம் உதயநிதி கதாநாயகனாக நடிப்பார் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் உதயநிதியின் மனைவியான கிருத்திகா உதயநிதி.