நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட கமர்ஷியல் திரைப்படம் என்பதையும் தாண்டி கதைகளுக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து பெரும் வெற்றியை பெற்று கொடுத்த மகாராஜா. அதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் எளிமையானது என்றாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
ஓ.டி.டியில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதி மீண்டும் நித்திலன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு லைன் அப் படங்கள் அதிகமாக இருப்பதால் இந்த படம் வருவதற்கு தாமதமாகும் என கூறப்படுகிறது.