உள்ளாடையோடு ஒரு போட்டோ வேணும். ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா மோகனன்!.

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் சசிக்குமார் மனைவி கதாபாத்திரத்தில்தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையானார்.

 ரெண்டாவது படமே பெரும் படம்:

முதல் படம் சூப்பர் ஸ்டார் படம் என்றால் இரண்டாவது படமே விஜய் படத்தில் வாய்ப்பை பெற்றார் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

malavikamohanan

ஆனால் அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் தனுஷோடு இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் மாளவிகா மோகனன்.

மலையாளத்தில் கிரிஸ்டி:

அடுத்ததாக மலையாளத்தில் இவர் நடித்த கிரிஸ்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெற்று வருகிறார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் நேர்க்காணல் நடத்தி வந்தார் மாளவிகா மோகனன்.

malavikamohanan

அதில் ரசிகர்கள் பல வாறு இவரிடம் கேள்விகளை கேட்டு வந்தனர். அப்போது ரசிகர் ஒரு எல்லை மீறி உள்ளாடையுடன் ஒரு புகைப்படத்தை பதிவேற்றும்படி கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் அவருடைய உள்ளாடையை மட்டும் வைத்து போட்டோ பிடித்து அனுப்பியிருந்தார்.

அந்த புகைப்படம்தான் இப்போது பிரபலமாகி வருகிறது.