News
ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சோதனை – உதவிய எம்.எல்.ஏ
அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிரூத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்சமயம் நடந்து வருகிறது. இதில் ஒரு காட்சியில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு நிகழ்வது போன்ற காட்சியை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக கடலூர் புதுவை எல்லையில் உள்ள குருவி நத்தம் – அழகிய நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அந்த காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டது.

செல்லும் வழியில் எல்லாம் ரசிகர்கள் நின்று நடிகர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆரவாரம் செய்து வந்தனர்.
ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை இந்த காட்சியை எடுக்க அனுமதி அளிக்க முடியாது என கூறிவிட்டது. இந்நிலையில் அந்த தொகுதி எம்.எல்.ஏவான செந்தில்குமாரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி.
உடனே நெடுஞ்சாலை துறையை தொடர்புக்கொண்டு ரஜினிக்கு அனுமதி வாங்கி தந்துள்ளார் எம்.எல்.ஏ
