Connect with us

புதுப்படம் எங்களுக்கு வேண்டாம்!.. ரீ ரிலீஸ் படமே போதும்!.. திரையரங்குகள் இப்படி முடிவெடுக்க என்ன காரணம்?

ajith vijay

Latest News

புதுப்படம் எங்களுக்கு வேண்டாம்!.. ரீ ரிலீஸ் படமே போதும்!.. திரையரங்குகள் இப்படி முடிவெடுக்க என்ன காரணம்?

cinepettai.com cinepettai.com

திரையரங்குகளில் சமீப காலமாக ரீ ரிலீஸ் திரைப்படங்கள் என்பவை நல்ல வரவேற்பை பெற துவங்கியுள்ளன. ஆரம்பத்தில் சென்னை மாதிரியான பெரும் நகரங்களில் நடிகர்களின் பிறந்தநாளின்போது மட்டும் பழைய படங்களை மறு வெளியீடு செய்து வந்தனர்.

ஆனால் இப்போதெல்லாம் உலக அளவில் மறுவெளியீடு நடக்கும் அளவிற்கு இந்த மறுவெளியீட்டிற்கு வரவேற்பு கூடியுள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே முத்து படம் ஜப்பானில் மறு வெளியிடாகி அந்த மக்கள் படத்தை கொண்டாடி தீர்த்த சம்பவம் நடந்தது.

இந்த நிலையில் தற்சமயம் தமிழ்நாட்டில் வெளியான கில்லி திரைப்படம் எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்து வருகிறது. இதனால் புது படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே கில்லி 20 ஆம் தேதி வெளியானப்போதே விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படமும் வெளியாகியிருந்தது.

ghilli
ghilli

கில்லி திரைப்படம் வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படத்திற்கு திரையரங்கம் குறைந்தது. தற்சமயம் நேற்று வெளியான ரத்னம் திரைப்படத்திற்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் திரையரங்குகள் மறு வெளியீட்டு படத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என பார்க்கும்போது புது படத்தை விடவும் மறு வெளியீட்டு படங்களுக்கு திரையரங்க பங்கு என்பது அதிகமாக உள்ளது.

மேலும் டிக்கெட்டின் விலை குறைவாக இருப்பதால் அந்த திரைப்படத்திற்கு நிறைய மக்கள் வருகின்றனர். எப்படி பார்த்தாலும் புது படத்தை விடவும் மறு வெளியீடு படங்கள் லாபகரமானதாக இருக்கின்றன. எனவேதான் திரையரங்குகள் அவற்றிற்கு முக்கியத்துவம் தருகின்றன என கூறப்படுகிறது.

To Top