Connect with us

இப்படிதான நடிகைகளோட அம்மாக்களுக்கும் இருந்துருக்கும்!.. பயில்வான் ரங்கநாதனை ப்ளாக் செய்த நடிகை ஷகிலா!..

shakila bailwan ranganathan

Latest News

இப்படிதான நடிகைகளோட அம்மாக்களுக்கும் இருந்துருக்கும்!.. பயில்வான் ரங்கநாதனை ப்ளாக் செய்த நடிகை ஷகிலா!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் வெளிப்படையாக கிசு கிசு பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். முன்பெல்லாம் மிக அதிகமாக பல நடிகர்களையும் நடிகைகளையும் தொடர்புப்படுத்தி பேசி வந்தார் பயில்வான் ரங்கநாதன்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல திரைத்துறையிலேயே அதற்கு அதிகமாக எதிர்ப்பு வர துவங்கியப்பிறகு தற்சமயம் அதை குறைத்துக்கொண்டுள்ளார். ஆனாலும் இன்னமும் கிசுக்கிசுக்களை அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷகிலா மற்றும் பயில்வான் ரங்கநாதன் இருவரும் கலந்துக்கொண்டனர். அதில் பேசிய ஷகிலா உங்கள் கடைசி பெண் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? என கேட்டுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியான பயில்வான் ரங்கநாதன் சும்மா அவதூறாக பேசாதீர்கள். என் பெண் அப்படியெல்லாம் செய்யவில்லை. முதலில் ஒரு பெண்ணாக நடந்துக்கொள்ளுங்கள். இப்படி மற்றொரு பெண் மீது வீண் அவதூறு பரப்புகிறீர்களே என சத்தம் போட்டார்.

அப்போது அதற்கு பதிலளித்த ஷகிலா நீங்கள் ஒவ்வொரு நடிகை குறித்தும் கிசு கிசு பேசும்போது அந்த நடிகைகளின் அம்மாக்களுக்கும் இப்படிதானே இருந்திருக்கும். இத்தனைக்கும் நான் தப்பாக கூட ஒன்றும் கூறவில்லை. உங்கள் பெண் காதலிக்கிறார் என்றுதான் கூறினேன். ஆனால் நீங்கள் நடிகைகள் குறித்து என்னவெல்லாம் கூறுகிறீர்கள் என கேட்டிருந்தார்.

இந்த விவாதம்தான் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

POPULAR POSTS

kamalhaasan
sree leela
modi sathyaraj
vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
To Top