நடிகர் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் சமீபத்தில் அவர் சபரிமலைக்கு சென்ற பொழுது அங்கே நடிகர் மம்முட்டிக்காக பூஜை நடத்தினார் என்று ஒரு தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் இது குறித்து மோகன்லாலிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த மோகன்லால் கூறும்போது மம்முட்டியை எனக்கு பிடிக்கும் அவரும் நானும் ரொம்ப நாள் நண்பர்கள்.
அவருக்காக நான் அந்த பூஜையை செய்ய வேண்டும் என்று நினைத்ததால் செய்தேன். ஆனால் அங்கு தேவஸ்தானத்தில் இருந்த யாரோ ஒருவர் இந்த விஷயத்தை வெளியில் லீக் செய்து விட்டனர்.
உண்மையில் இது வெளியில் பேச வேண்டிய விஷயமே கிடையாது உங்களுக்கு பிடித்த ஒரு நபருக்காக பூஜை செய்வது என்பது உங்களது தனிப்பட்ட விஷயம் அதை எதற்கு வெளியில் கூற வேண்டும் என்று பதில் கொடுத்து இருக்கிறார் மோகன்லால்.