Latest News
அடப்பாவிகளா!.. எத்தனை நாள் கண் முழிச்சி போட்ட பாட்டு!.. திருவிழாவில் மனம் நொந்த ஜிவி பிரகாஷ்!..
ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா வரிசையில் தன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி பிரகாஷின் முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே உருகுதே மருகுதே மற்றும் வெயிலோடு விளையாடி ஆகிய இரண்டு பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன.
இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் இவர் இசையமைப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அதிலும் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஜி.வி பிரகாஷ். தனுஷ் நடித்த நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.
இந்த நிலையில் வாத்தி திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக வெளியில் நண்பரை காண சென்றிருந்தார் ஜி.வி பிரகாஷ். அந்த சமயத்தில் அவரது நண்பரின் வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த திருவிழாவில் வாத்தி படத்தில் வரும் வா வாத்தி என்னும் பாடலுக்கான இசை ஒலித்து கொண்டிருந்தது. அந்த இசையை ஒரு இரவு முழுவதும் அமர்ந்து இசையமைத்தாராம் ஜி.வி. எனவே அவர் அந்த இசையை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஒரு மோசமான குரலில் அந்த பாடல் பாடப்படுவது கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். என்னவென பார்க்கும்போது திருவிழாவில் ஆர்க்கெஷ்ட்ரா கச்சேரி நடந்துள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு போட்ட பாட்டை இப்படி காலி பண்றாங்களே என மனம் வருந்தி இருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.