தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களாக நடித்து வந்தாலும் அதில் நல்ல கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் நானி.
அப்படியாக அவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ஹிட் 3. மக்களை தொடர்ந்து கொலை செய்து வரும் சீரியல் கொலைகாரர்களை தேடி கண்டறிந்து அவர்களை கொலை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் நானி.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் திரைப்படம் குறித்து தற்சமயம் ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது. விமல் என்கிற ஒருவர் தன்னுடைய கதையை தான் திருடி ஹிட் 3 என்கிற படமாக எடுத்து விட்டதாக குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.
ஹிட் வரிசை படங்களை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு பாகங்கள் இந்த படம் இதே மாதிரியான படங்களாகதான் வந்திருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது இது எப்படி திருட்டு கதையாக இருக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தாலும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹிட் 3 பட குழுவிற்கு நோட்டீஸ் வந்துள்ளது.