ரூம்ல இருக்க கடுப்பா இருக்கு.. மாறுவேடத்தில் சென்று விஜய் செய்த வேலை.. என்னென்ன பண்றாரு பாருங்க!.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். தற்போது விஜய் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க போகிறார் என்ற தகவல் சமீபத்திய அறிக்கையின் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது விஜய் நடித்த கோட் படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜய் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை நடிகர் நட்டி நடராஜ் தெரிவித்திருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் நட்டி நட்ராஜ்

இவர் தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளராக இருக்கிறார். நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இவரை நடராஜ் என பெயர் மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் யூத், ஹிந்தி ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

natty nadaraj

சக்கர வியூகம், மிளகாய், முத்துக்கு முத்தாக ஆகிய திற தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார். மேலும் மிளகாய் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது.

நடிகர் விஜய் பற்றி நட்டி நட்ராஜ் கூறியது

இவர் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த யூத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புலி ஆகிய திரைப்படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நட்டி நட்ராஜ் விஜய் பற்றி கூறும்போது, ஒருமுறை விஜய்.. நட்டி நட்ராஜிடம் படப்பிடிப்பில் இருந்தபோது சென்னையில் இருந்தால் வெளியில் எங்கேயாவது செல்லலாம். ஆனால் இங்கு நாலு சுற்றில் இருப்பது எனக்கு மிகவும் அழுத்தமாக இருக்கிறது என கூறி இருக்கிறார்.

வாருங்கள் வெளியில் சென்று வரலாம் என கூறினார் விஜய். ஆனால் இதற்காக மாறுவேடத்தில் லுங்கி கட்டிக்கொண்டு டி-ஷர்ட் போட்டுக்கிட்டு, தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு இருவரும் நடந்தே வெளியில் சென்றோம்.

இடையில் ஒரு டீக்கடையை பார்த்துவிட்டு வாங்க இங்கே டீ குடிக்கலாம் என கூப்பிட்டார். நான் கூறினேன் இங்கு டீ குடிக்க வேண்டாம். வாருங்கள் நாம் ஹோட்டலில் சென்று டீ குடிக்கலாம் என கூறியதற்கு, இல்லை இல்லை இங்கு தான் டீ குடிக்க வேண்டும் என கூறிவிட்டு ஒரு டீக்கடையில் டீ குடித்தோம்.

அதன் பிறகு நடந்து செல்லும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றில் படப்பிடிப்பில் உள்ள லைட் மேன்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். விஜய் அந்த ஆற்றின் படிக்கட்டில் உட்கார்ந்து சற்று நேரம் வேடிக்கை பார்த்துக்கிட்டு அந்த காற்றை சுவாசித்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். என நட்டி நட்ராஜன் விஜய் பற்றி கூறியிருக்கிறார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version