இரத்த காவு கேட்கும் வீடு – உண்மை கதையை மையப்படுத்திய த்ரில்லர் சீரிஸ்

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பல்வேறு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்சமயம் ஒரு த்ரில்லர், வெப் சீரிஸை வெளியிட்டு உள்ளது. வாட்ச்சர் எனப்படும் இந்த வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

உண்மையாக நடந்த கதையின் தழுவலே இந்த படம் என்பதும் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. படத்தின் கதைப்படி ஒரு குடும்பம் ஒரு புதிய வீட்டிற்கு குடி வருகிறது. சாதரணமாக பேய் படங்கள் எல்லாமே இப்படிதான் ஆரம்பிக்கும். ஆனால் இந்த கதை சற்று மாறுப்பட்டதாக இருக்கிறது.

குடி வரும் அந்த குடும்பத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் ஒருவர் “நான் உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்” என எழுதியுள்ளார். அந்த வீட்டில் உள்ளவர்கள் சில சமயம் ஜன்னல் வழியாக பார்க்கும்போது வீட்டிற்கு எதிராக உடல் பருமனான நபர் ஒருவர் நிற்பதை பார்க்க முடிகிறது. 

பிறகு அவர்களது வீட்டில் நிறைய மர்மமான விஷயங்கள் நடக்க துவங்குகிறது. இவற்றில் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்பதே கதை.

https://www.youtube.com/watch?v=5HDkw100sXQ

இந்த சீரிஸின் ட்ரைலரே பார்ப்பதற்கு மிகவும் விறு விறுப்பாக உள்ளது. கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இந்த சீரிஸ் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.