கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

கோவாவில் கடலுக்கு அடியில் கிடைத்த புதையல் குறித்த விஷயங்கள் தான் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

எல்லா காலங்களிலுமே இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் யாராவது ஒரு வெளிநாட்டு ஆட்களுக்கு கீழ் ஆட்சியில் தான் இருந்துள்ளது. அந்த வகையில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் பிரெஞ்சுகாரர்கள் போன்ற பலர் இந்தியாவில் அதிகம் செலுத்தி வந்துள்ளனர்.

1700 கள் காலகட்டங்களில் கோவா பகுதியானது போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பெரும்பாலும் துறைமுக நகரங்களை கையகப்படுத்துவதே அப்பொழுது வந்த வெளிநாட்டவர்களின் முக்கிய வேலையாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் கோவாவில் இருந்து கிளம்பிய Nossa Senhora do Cabo sank என்கிற கப்பல் அந்த சமயத்தில் கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளானது இந்த கப்பலில் நூற்றுக்கும் அதிகமான அடிமைகளும் பல கோடி மதிப்புள்ள பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்த கப்பல் கிளம்பி இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த தாக்குதலின் காரணமாக மடகாஸ்கருக்கு அருகிலேயே இந்த கப்பல் மூழ்கி விட்டது இந்த நிலையில் 300 வருடங்களுக்குப் பிறகு தற்சமயம் இந்த கப்பலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதிக அளவில் தங்கம் வைரம் போன்றவை இந்த கப்பலில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.