Actress
ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய பார்வதி நாயர்.. குட்டை ஆடையில் சேட்டை வீடியோ!.
Parvathy Nair: வெள்ளித்துறையில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் தான்.
சில நடிகைகள் சிறிய வேடமாக இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைவார்கள். இன்னும் குறிப்பிட்ட சில நடிகைகள் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் புதிதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். இதனால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கவலை இல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பிரபலங்களாகவே இருப்பார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் இருப்பவர் தான் பார்வதி நாயர். இவர் சமீப காலங்களாக இணையதளத்தில புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
என்னை அறிந்தால் பார்வதி நாயர்
இவரின் உண்மையான பெயர் பார்வதி வேணுகோபால் நாயர். தன்னுடைய 15-ஆவது வயதில் மாடலிங் செய்ய தொடங்கினார். பார்வதி நாயர் அபுதாபியில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார்.
மேலும் நடிகர் அஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதுக்கு பரிந்துரையை பெற்றார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும்
ஆனால் முதன் முதலில் பாப்பீன்ஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் கன்னடத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பார்வதி நாயர்
பார்வதி நாயர் தற்பொழுது சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருக்கிறார். பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், சமூக வலைதளங்ளில் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பார்வதி நாயர் இணையத்தில் பதிவேற்றி உள்ள புகைப்படமானது, அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் குட்டை ஆடையை அணிந்துக்கொண்டு மிக ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.
இதனை தற்போது பார்வதி நாயரின் ரசிகர்கள், ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிக அழகாக உள்ளார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.